This Article is From Jun 18, 2020

2-ம் உலகப்போரின் 75-வது வெற்றி பேரணி! ரஷ்யாவுக்கு ராணுவ குழுவை அனுப்புகிறது இந்தியா

இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்றதன் நினைவாக ரஷ்ய  தலைநகர் மாஸ்கோவில் பேரணி நடைபெறவுள்ளது. இதில் ரஷ்யாவின் நட்பு நாடுகள் பங்கேற்பதற்குத அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 75 பேர் கொண்ட இந்திய குழு ரஷ்யாவில் நடைபெறும் பேரணியில் பங்கேற்கும்.

Advertisement
இந்தியா

இந்திய குழு பங்கேற்க மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

Highlights

  • 2-ம் உலகப்போரின் வெற்றியை ரஷ்யா ஆண்டுதோறும் கொண்டாடுகிறது
  • ஜூன் 24ம் தேதி தலைநகர் மாஸ்கோவில் பேரணி நடைபெறுகிறது
  • பேரணியில் பங்கேற்க நட்பு நாடுகளுக்கு ரஷ்யா அழைப்பு
New Delhi:

ரஷ்யாவில் நடைபெறவுள்ள 2-ம் உலகப்போரின் 75-வது வெற்றிப் பேரணியில் பங்கேற்பதற்கு ராணுவ குழுவை இந்தியா அனுப்பவுள்ளது. 

ஜூன் 24-ம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 75 பேர் கொண்ட இந்திய குழுவினர் பங்கேற்கின்றனர்.

இதுதொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்றதன் நினைவாக ரஷ்ய  தலைநகர் மாஸ்கோவில் பேரணி நடைபெறவுள்ளது. இதில் ரஷ்யாவின் நட்பு நாடுகள் பங்கேற்பதற்குத அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 75 பேர் கொண்ட இந்திய குழு ரஷ்யாவில் நடைபெறும் பேரணியில் பங்கேற்கும்.

Advertisement

இவ்வாறு  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர், இந்தியாவுக்கு பேரணியில்  பங்கேற்குமாறு அழைப்பு  விடுத்திருக்கிறார்.

இந்த பேரணியில் இந்தியாவின் முப்படைகளை சேர்ந்த 75 பேர் பங்கேற்க மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.  இந்தியாவை தவிர்த்து மற்ற சில நாடுகளின் படைப்பிரிவுகளும் இந்த பேரணியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement