This Article is From Aug 31, 2019

புத்தகம் வாசிப்பதில் உலக சாதனை படைத்த மாணவர்!! அப்படி என்ன செய்தார்?!

இன்னும் பல சாதனைகளை படைப்பேன் என்று மாணவர் தெரிவித்துள்ளார். உலக சாதனை படைத்ததற்காக பல்வேறு தரப்பினர் மாணவரை வாழ்த்தியுள்ளனர்.

புத்தகம் வாசிப்பதில் உலக சாதனை படைத்த மாணவர்!! அப்படி என்ன செய்தார்?!

இதற்கு முன்பாக அல்ஜீரியா நாட்டை சேர்ந்தவர்தான் முதலில் இருந்தார்.

Kanpur, Uttar Pradesh:

புத்தகம் வாசிப்பதில் உலக சாதனை படைக்க முடியுமா என்றால், அதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதைத்தான் இந்த மாணவரின் சாதனை நமக்கு காட்டுகிறது. 

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் அலாவுதீன் என்பவர் தொடர்ந்து 27 மணிநேரமாக புத்தகத்தை சத்தம்போட்டு உரக்க வாசித்து சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியை ஆங்கிலத்தில் 'Reading Aloud Marathon' என்று அழைக்கிறார்கள். 

இந்திய மாணவரின் இந்த சாதனைக்கு முன்பாக அல்ஜீரியாவை சேர்ந்த ஒருவர் 24 மணிநேரம் புத்தகத்தை உரக்க வாசித்திருந்தார். அதுதான் உலக சாதனையாக இருந்து வந்தது. தற்போது அதனை மாணவர் அலாவுதீன் முறியடித்துள்ளார். 

இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு மாணவர் அலாவுதீன் அளித்த பேட்டியில், 'நான் எனது ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர்கள்தான் என் மீது நம்பிக்கை வைத்து என்னை உற்சாகப்படுத்தினார்கள். இன்னும் பல சாதனைகளை நான் முறியடிப்பேன்' என்றார். 

அலாவுதீனின் ஆசிரியர் திலீப் கங்வார் கூறுகையில், 'எனது மாணவர் எப்போதும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். அதற்காக மிகக்கடினமாக உழைத்தார். அவருக்கு மாணவர்களுக்கும் பல்கலைக் கழகமும் உறுதுணையாக இருந்தன' என்றார். 

.