முதல் டெஸ்ட்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தை 250/9 என்ற கணக்குடன் துவங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் புஜாரா 123 ரன்களையுன், ரோஹித் ஷர்மா 37 ரன்களையும், பன்ட்,அஷ்வின் தலா 25 ரன்களையும் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், லயன், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா முதல் ஓவரின் 3 வது பந்திலேயே ரன் கணக்கை துவங்காமல் இஷாந்த் ஷர்மா பந்தில் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார் ஃபின்ச். இன்றைய நாளின் முதல் நான்கு பந்துகளில் ரன்களே குவிக்கப்படாமல் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் களமிறங்கிய கவாஜா அறிமுக வீரர் மார்க்கஸுடன் இணைந்தார். ஓரளவுக்கு தாக்குபிடித்து இந்த இணை 45 ரன்கள் சேர்த்த நிலையில் மார்க்கஸ் அஷ்வின் பந்தில் விஜயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்திய பந்துவீச்சை சமாளிப்பது ஆஸி வீரர்களுக்கு சிரமமான விஷயமாக இருந்தது. இஷாந்த் மற்றும் ஷமி இன்று வீசிய 10 ஓவர்களில் 6 மெய்டன் மற்றும் 10 ரன்களே எடுக்கப்பட்டன.
உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் குவித்திருந்த ஆஸ்திரேலியா. ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே ஷான் மார்ஷ் விக்கெட்டை இழந்தது. மற்றோரு துவக்க வீரரான கவாஜா 28 ரன்களில் அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ஹேண்ட்ஸ்கோம்ப்பும், ஹெட்டும் நிதானமாக ஆடி ரன் குவித்து வருகின்றனர்.
தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் குவித்திருந்த ஆஸ்திரேலிய அணி மிகவும் பொறுமையாக ஆடி ரன் குவித்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேய வீரர்களை திணறடித்தனர்.
ஹேண்ட்ஸ்கோம்ப் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ராஹ் பந்தில் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஆட வந்த கேப்டன் பெய்ன் 5 ரன்னில் இஷாந்த் பந்தில் கீப்பர் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஓரளவுக்கு தாக்குபிடித்த கம்மின்ஸ் 10 ரன்னில் பும்ராஹ் பந்தில் வெளியேறினார்.
ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ட்ராவிஸ் ஹெட் 61 ரன்களுடனும், ஸ்டார்க் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா, பும்ராஹ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆஸ்திரேலியா தற்போது இந்திய அணியை விட 59 ரன்கள் பின் தங்கியுள்ளது.