This Article is From Jan 03, 2019

ஆஸ்திரேலிய தொடர்: 3வது சதமடித்து முத்திரைப் பதித்த புஜாரா..!

கடைசி டெஸ்ட்டில் புஜாரா அபாரமாக ஆடி சதமடித்தார்

Advertisement
Sports Posted by

கடைசி டெஸ்ட்டில் புஜாரா அபாரமாக ஆடி சதமடித்தார். இது இந்த தொடரில் அவரது 3வது சதமாகும். இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் துவங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்திய அணியில் ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ராகுலும், ஆஸ்திரேலிய அணியில் பின்ச், மிட்செல் மார்ஷுக்கு பதிலாக லப்ஸங்னே, ஹேண்ட்ஸ்கோம்பும் சேர்க்கப்பட்டனர்.

அதிரடியாக 2 பவுண்டரி அடித்த ராகுல் 9 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த புஜாராவும், மயன்க் அகர்வாலும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர்.

மயன்க் அகர்வால் 77 ரன்னுக்கு ஆட்டமிழக்க புஜாரா மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். புஜாரா டெஸ்ட் போட்டிகளில் தனது 18வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த தொடரில் அவரது மூன்றாவது சதம் இதுவாகும்.

Advertisement

இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் புஜாரா விளங்குகிறார். அதிக சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறினார்.

Advertisement