இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்திருந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்கியது. ஆட்டம் துவங்கியதிலிருந்தே ஆஸ்திரேலிய அணியினர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நேற்றைய ஸ்கோருடன் 13 ரன்கள் சேர்த்த நிலையில் 8வது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா. 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க் பும்ராஹ் பந்தில் ஆட்டமிழந்தார். அதோடு மழை காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரம் தடைபட்டது.
மதிய உணவு இடைவேளை ஒரு மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டது. மழைக்கு பின் துவங்கிய போட்டியில் நன்றாக ஆடி வந்த ட்ராவிஸ் ஹெட் அவுட் ஆன அடுத்த பந்தில் ஹேசல்வுட் அவுட் ஆக ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
முன்னதாக இந்தியா டாப் ஆர்டரின் முதல் நாளில் சொதப்பினாலும் புஜாராவின் சதத்தால் 250 ரன்களக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் மிரட்டினர். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ட்ராவிஸ் ஹெட் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் அஷ்வின், பும்ராஹ் தலா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த், ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்தியா 15 ரன்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் ஆட்டத்தை துவங்க உள்ளது. மழை குறுக்கீடு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உணவு இடைவேளைக்கு முன் ஆஸ்திரேலியா 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 15 ரன்கல் முன்னிலையுடன் ஆட்டத்தை துவங்கிய இந்தியா தேநீர் இடைவேளையின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் குவித்துள்ளது. துவக்க வீரர்கள் ராகுல் - விஜய் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் குவித்தனர். ராகுல் 44 ரன்கள் எடுத்தும், விஜய் 18 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். தேநீர் இடைவேளையின் போது புஜாரா 11 ரன்களுடனும், கோலி 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தற்போது 100 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
15 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தை துவங்கிய இந்தியா தேநீர் இடைவேளையின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின் தொடர்ந்து ஆடிய இந்திய அணி ஆட்ட நேர இறுதியில் 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்துள்ளது. இந்திய வீரர்கள் ராகுல் 44 ரன்களும், விஜய் 18 ரன்களும், கோலி 34 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
இந்திய கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் 9வது டெஸ்ட் போட்டியில் ஆடிவருகிறார். இந்த போட்டியில் அவர் ஆஸ்திரேலியாவில் 1000 ரன்களை கடந்தார். இதுதான் ஒரு சர்வதேச வீரர் ஆஸ்திரேலியாவில் அதிவேக்மாக 1000 ரன்களை கடக்கும் சாதனையாகும்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் புஜாரா 40 ரன்களுடனும், ரஹானே 2 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்கமால் உள்ளனர். இந்திய அணி பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தால் இரண்டாவது இன்னிங்ஸில் தற்போது 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 300 ரன்களுக்கு மேல் நாளை நேநீர் இடைவேளைக்குள் இலக்கு நிர்ணயித்தால் இந்தியா வெற்றி பெறுவது உறுதி என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.