Read in English
This Article is From Dec 19, 2019

டெல்லியில் 19 மெட்ரோக்கள் மூட்டப்பட்டன…! போராட்டத்தினால் ஸ்தம்பித்த தலைநகரம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திட்டமிட்ட போராட்டங்களை நிறுத்த இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு செல்ல வழியில்லாமல் அடைந்து கிடக்கின்றன. டெல்லி -குர்கான் எல்லை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by (with inputs from IANS)

சாலை போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. (Representational)

New Delhi:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  டெல்லியில் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு  அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் மக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் லால் குய்லா, ஜாமா மஸ்ஜித், சாந்தினி சோக், விஷ்வாவித்யாலா நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நிற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய செயலகத்தின் முன் மற்றும் பின் வாசல்கள் மூடப்பட்டது. ஆனால் இங்கு இண்டெர்சேஞ்ச் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

ராஜீவ் சோக், படேல் சோக், லோக் கல்யான் மார்க், உத்யோக் பவான், ப்ரகதி மைதான், ஜன்பாத், கான் மார்க்கெட் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் மெட்ரோ நிலையங்கள் இன்று செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வசந்த் விகார் மற்றும் மண்டி ஹவுஸிலும் மெட்ரோ நிலையங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  சாலை போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. 

Advertisement

அதிகாரிகள் சாலைகளை தடுத்து  வைத்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திட்டமிட்ட போராட்டங்களை நிறுத்த இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு செல்ல வழியில்லாமல் அடைந்து கிடக்கின்றன. டெல்லி -குர்கான் எல்லை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

செங்கோட்டைக்கு அருகே 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. பல போரட்டக்காரர்களையும் தடுத்து வைத்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் பாரபட்சமானவை என்று பலரும் கண்டித்துள்ளனர்.  இந்த சட்டத்திற்கு எதிராக அரசியல் குழுக்கள், மாணவர்  அமைப்புகள், அடிப்படை உரிமை ஆர்வலர்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

Advertisement
Advertisement