This Article is From Jun 09, 2019

மாயமான விமானத்தை குறித்து தகவல் கூறுவோருக்கு ரூ.5 லட்சம் : விமானப் படை அறிவிப்பு

மாயமான அந்த விமானத்தை தேடும் பணியில் சுகோய்-30 சி-130 ஆகிய இரு ரகத்தைச் சேர்ந்த விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மாயமான விமானத்தை குறித்து தகவல் கூறுவோருக்கு ரூ.5 லட்சம் : விமானப் படை அறிவிப்பு

ஏஎன் -32 என்ற விமானம் 13பேருடன் மாயமானது (File)

New Delhi:

அஸ்ஸாம் மாநிலத்தில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஏஎன் -32 என்ற விமானம் 13 பேருடன் மாயமானதை அடுத்து விமானத்தை தேடும் பணியில் இரு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அஸ்ஸாமின் ஜோர்ஹாட் விமானப் படை தளத்தில் இருந்து ஏஎன் -32 ரகத்தைச் சேர்ண்ட போக்குவரத்து பயன்பாட்டுக்கான விமானம் புறப்பட்டுச் சென்றது.அருணாசல பிரதேச மாநிலம் மெசுகாவில் உள்ள ராணுவ தளத்தை நோக்கிச் சென்ற அந்த விமானத்தில் 8 விமானப் பணியாளர்களும் 5 பயணிகளும் பயணித்தனர். விமானம் புறப்பட்ட 35 நிமிடத்திலேயே ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. அத்துடன், விமானக் கட்டுபாட்டு அறையுடனான தனது தொடர்பையும் இழந்தது.

மாயமான அந்த விமானத்தை தேடும் பணியில் சுகோய்-30 சி-130 ஆகிய இரு ரகத்தைச் சேர்ந்த விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்திய ராணுவம் மற்றும் இந்தோ -திபெத் எல்லை காப்புப் படையைச் சேர்ந்த வீரர்களும் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் 13 பேருடன் மாயமான விமானம் பற்றி தகவல் தருவோருக்கு 5 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என விமானப்படை அறிவித்துள்ளது. தகவல் தெரிந்தவர்கள் 0378-3222164, 9436499477, 9402077267 மற்றும் 9402132477 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

.