বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Feb 27, 2019

பாகிஸ்தான் தீவிரவாத பயிற்சி முகாமின் புகைப்படங்கள் வெளியானது!

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரும் தீவிரவாத பயிற்சி முகாமை இந்திய விமானப்படை இன்று தகர்த்துள்ளது

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

பாலகோட்டில் உள்ள பயிற்சி முகாமில் இருந்து கொண்டுதான் இந்தியாவுக்கு எதிரான சதித் திட்டங்களை தீவிரவாதிகள் தீட்டியும், செயல்படுத்தியும் வந்தனர். பயிற்சி முகாமில் 600 பேர் தங்கும் அளவுக்கு வசதிகள் உள்ளன.

இந்த புகைப்படங்களை மத்திய அரசு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதியில் இருந்து சரியாக 80 கிலோ மீட்டர் தொலைவில் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் செயல்பட்டு வந்திருக்கிறது.அதில் துப்பாக்கி சுடுவதற்கான பிரத்யேக வடிவமைப்பு, நிச்சல் குளம், ஜிம் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.

மலைப் பகுதியில் இந்த பயிற்சி முகாம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதி அவர்கள் பதுங்கிக் கொள்வதற்கு சாதகமாக அமைந்துள்ளது.

Advertisement

பயிற்சி முகாம் கடந்த 2003-04-ம் ஆண்டில் கட்டமைக்கப்பட்டது. ரஷ்யாவுக்கு எதிராக யுத்தம் செய்த ஆப்கன் மூத்த போர் வீர்ர்களால் இந்த பயிற்சி முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

முதலில் பாகிஸ்தான் ராணுவத்திற்காக இளைஞர்களை சேர்த்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையமாகத்தான் இந்த முகாம் செயல்பட்டு வந்துருக்கிறது.

முகாமின் மெய்ன் ஹாலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் இடமும், அமைப்பின் கொடியையும் நாம் பார்க்கலாம்.

Advertisement

இந்த முகாமுக்கு, ஜெய்ஷ் இ முகமதுவின் கமாண்டர் மசூத் அசாரின் சகோதர்ர் முப்தி அப்துல் அமீர்தான் ஜெய்ஷ் இ முகமதுவுக்கு பொறுப்பாளராக இருக்கிறார்.

Advertisement

அவர் ஆண்டுதோறும் நடைபெறும் அணிவகுப்பில் மட்டும் கலந்து கொள்கிறார். முகாமில் காணப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் நாட்டு கொடிகள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் தீவிரவாதிகள் சித்தரிப்பு செய்துள்ளனர்.

Advertisement

பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.-ன் தூண்டுதலின்பேரில் பாலகோட் தீவிரவாத முகாமில் 250-க்கும் அதிகமான தீவிரவாதிகள் பயிற்சி பெற்று சென்றுள்ளனர்.

வெடி மருந்து கிடங்கும், சுமார் 200-க்கும் அதிகமான ஏ.கே. 47 துப்பாக்கிகளும் டெட்டனேட்ரடர் உள்ளிட்ட பயங்கர வெடி மருந்துகளும் ஒரு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. பாலகோட் பயிற்சி முகாமுக்கு ஜெய்ஷ் இ முகமதுவின் மைத்துனர் மவுலானா யூசுப் அசார் இதற்கு பொறுப்பாளராக இருந்துள்ளார். அவர் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.

இங்கு தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்தவர்கள் பாகிஸ்தானின் முன்னாள் ராணுவத்தினர். நவீன ரக துப்பாக்கிகள், யுத்த தந்திரங்கள், வெடி குண்டுகளை தயாரிப்பது, தற்கொலைப்படை தாக்குதல், ராணுவ வாகனங்களை ஹைஜாக் செய்வது, மிக மோசமான சுற்றுச்சூழலில் தற்காத்துக் கொள்வது போன்ற மிக கடுமையான பயிற்சிகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ‘'பாதுகாப்பான கையில் நாடு உள்ளது'' - விமானப்படை தாக்குதல் குறித்து பிரதமர் மோடி கருத்து

Advertisement