Read in English
This Article is From Feb 27, 2019

ஜம்மூ காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்ட்டர் விழுந்துள்ளதாக தகவல்… 2 உடல்கள் கண்டெடுப்பு!

இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்ட்டர், ஜம்மூ காஷ்மீர் புட்காம் பகுதியில் விழுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா
Srinagar:

இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்ட்டர், ஜம்மூ காஷ்மீர் புட்காம் பகுதியில் விழுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பத்தை அடுத்து, 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் தரப்பு கூறியுள்ளது. 

நேற்று அதிகாலை இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை அழித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தரப்பு எல்லைக் கட்டுப்பாட்டை மீறி பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் போர்ப் படை ஹெலிகாப்ட்டர் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஜம்மூ, ஸ்ரீநகர் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் வான் வழிப் பயணத்துக்குத் காலவரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. பொதுப் போக்குவரத்து விமானங்களின் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

ரஷ்ய தயாரிப்பான எம்ஐ-17 ரக போர் ஹெலிகாப்ட்டர் தான், புட்காமின் காரெண்டு கலான் கிராமத்தில் இன்று காலை 10:05 அளவில் விழுந்துள்ளது. 

Advertisement

இதையடுத்து அந்த பகுதியைச் சுற்றி பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

 

Advertisement

மேலும் படிக்க - "எல்லையில் தீவிரவாத முகாம்களை அழித்து இந்திய விமானப்படை அதிரடி!"

Advertisement