This Article is From Mar 01, 2019

அதிகரித்த அழுத்தம்... இந்திய விமானியை விடுவிக்க சம்மதம் கூறிய இம்ரான் கான்!

இந்திய விமானப்படை வீரர் அபினந்தனை (IAF Pilot Abhinandan Varthaman) நல்லெண்ண அடிப்படையில் நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

அதிகரித்த அழுத்தம்... இந்திய விமானியை விடுவிக்க சம்மதம் கூறிய இம்ரான் கான்!

IAF Pilot Abhinandan Varthaman: இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் வர்தமன் நேற்று சிறைவைக்கப்பட்டார்.

இந்திய விமானப்படை வீரர் அபினந்தனை (Abhinandan Varthaman) நல்லெண்ண அடிப்படையில் இன்று விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவு பெற வழிவகுக்கும் என்றால், இந்திய விமானியை விடுவிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை மேலும் பெரிதுப்படுத்த விரும்பவில்லை என்றும் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, தொலைபேசி வாயிலாக நேற்று பேச முயற்சி செய்ததாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நாங்கள் பயந்துவிட்டோம் என்று எண்ணிவிடக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி இந்திய விமானியை இன்று விடுவிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தி, பயங்கரவாதிகள் முகாமை அழித்தது. இதையடுத்து, நேற்று காலை இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. இந்த பதில் தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபினந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையில் அமைதியான சூழலை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்த சீனாவும், 'ஒரு நாட்டின் இறையாண்மையை மதித்து நடந்து கொள்ள வேண்டும்' என்றது. இதையடுத்துதான், இந்திய விமானியை விடுவிக்க பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்தது. 

 

மேலும் படிக்க - "இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தில் நற்செய்தி..!"

.