This Article is From Jul 29, 2020

இந்தியா வரும் வழியில் நடுவானில் எரிபொருள் நிரப்பிய ரஃபேல் விமானங்கள்!

பிரான்ஸின் பாடோ நகரில் உள்ள மேரிங்நாக் விமானப் படை தளத்தில் இருந்து நேற்று முன்தினம் இந்தியா புறப்பட்டன. 

இந்தியா வரும் வழியில் நடுவானில் எரிபொருள் நிரப்பிய ரஃபேல் விமானங்கள்!

New Delhi:

பிரான்ஸிலிருந்து இந்தியா வரும் ரஃபேல் ஜெட் விமானங்கள் நடுவானில் எரிபொருள் நிரப்பிய காட்சிகள் இணையதங்களங்களில் வைரலாக பரவி வருகின்றன. 

இதுதொடர்பாக இந்தியா விமானப்படை தனது ட்விட்டர் பதிவில், முதல்கட்டமாக இந்தியா வரும் ரஃபேல் போர் விமானங்கள், பிரான்ஸ் விமானப்படையின் விமானம் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பின. ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தாப்ரா விமானப் படை தளத்தில் 5 போர் விமானங்களும் நேற்று தரையிறங்குவது முன்பு எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. 

டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஜெட் விமானங்கள் பிரான்ஸின் பாடோ நகரில் உள்ள மேரிங்நாக் விமானப் படை தளத்தில் இருந்து நேற்று முன்தினம் இந்தியா புறப்பட்டன. 

பிரான்ஸ், இந்தியா இடையிலான தொலைவு 7,000 கி.மீ. ஆகும். மேரிங்நாக் விமானப் படை தளத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தாப்ரா விமானப் படை தளத்தில் நேற்று தரையிறங்கின. 

தொடர்ந்து, இந்த விமானங்கள் அம்பாலாவில் உள்ள விமானப் படை தளத்துக்கு இன்று பிற்பகல் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. தொடர்ந்து, விமானங்கள் தயாரானாலும், விமானிகளும், மெக்கானிக்குகளும் பயிற்சி பெறுவதற்காக பிரான்ஸிலே நீண்ட நாட்களாக இருந்தனர். 

இதைத்தொடர்ந்து, முதல் கட்டமாக 5 போர் விமானங்கள் நேற்று முன்தினம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள விமானங்களும் 2022க்குள் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(With inputs from agencies)

.