பிமல் படேல் தற்போது அமெரிக்க நிதித்துறை செயலகத்தின் துணை உதவி செயலாளராக இருந்து வருகிறார்.
Washington: இந்திய – அமெரிக்கரான பிமல் படேலை அரசு நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புக்கு அதிபர் ட்ரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.
ஜார்ஜியாவை சேர்ந்த படேல், அமெரிக்க நிதித்துறையின் உதவி செயலாளராக விரைவில் பொறுப்பு ஏற்கிறார். தற்போது அவர் இணை உதவி செயலாளர் பொறுப்பில் உள்ளார். அமெரிக்க நிதித்துறையில் பணிக்கு சேர்வதற்கு முன்பாக நிதி ஆலோசனை மற்றும் ஒழுங்குமுறை குழுவின் தலைவராக செயல்பட்டார்.
முன்னதாக அமெரிக்க ஃபெடரல் வங்கியின் காப்பீட்டு பிரிவின் இயக்குனராக செயல்பட்டு வந்த ஜெர்மியா நார்ட்டன் என்பவருக்கு மூத்த ஆலோசகராக படேல் இருந்தார்.
ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றிய படேல் அங்கு வங்கி ஒழுங்குமுறை குறித்த வகுப்புகளை மாணவர்களுக்கு எடுத்தார்.
ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பி.ஏ. பட்டமும், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் எம்.பி.பி. பட்டமும், ஜார்ஜ் டவுன் பல்கலைக் கழகத்தில் ஜே.டி. பட்டமும் படேல் பெற்றுள்ளார்.