This Article is From Jan 02, 2019

டெக்ஸாஸில் உள்ள கவுண்டிக்கு நீதிபதியான இந்தியர்!

டெக்ஸாஸில் உள்ள இந்த கவுண்டியில் 35 சதவிகிதம் பேர் ஆங்கிலேயர்கள், 24 சதவிகிதம் பேர் ஹிஸ்பானிக்ஸ், 21 சதவிகிதம் பேர் ஆசியர்கள் மற்றும் 20 சதவிகிதம் பேர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்.

டெக்ஸாஸில் உள்ள கவுண்டிக்கு நீதிபதியான இந்தியர்!

53 வயதான கேபி ஜார்ஜ், குடியரசு கட்சியின் நீதிபதி ஹோபர்ட்டை நவம்பர் வாக்கெடுப்பில் தோற்கடித்தார்.

Houston:

அமெரிக்கா வாழ் இந்தியரான கேபி ஜார்ஜ், ஃபோர்ட் பென்ட் கவுண்டியின் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அமெரிக்காவின் உயர் பதவிக்கு இந்தச் சமூகத்திலிருந்து செல்லும் முதல் நீதிபதி இவர் தான். 53 வயதான ஜார்ஜ், குடியரசு கட்சியின் நீதிபதி ஹோபர்ட்டை நவம்பர் வாக்கெடுப்பில் தோற்கடித்தார்.

அமெரிக்காவில், கவுண்டி நீதிபதி பதவியென்பது மாகாணத்துக்கு மாகாணம் வேறுபடும். கவுண்டியின் அளவை பொறுத்து அதிகாரம் மாறுபடும். ஃபோர்ட் பென்ட் கவுண்டு நல்ல அளவிலான மக்கள் தொகையை கொண்ட கவுண்டி. 

டெக்ஸாஸில் உள்ள இந்த கவுண்டியில் 35 சதவிகிதம் பேர் ஆங்கிலேயர்கள், 24 சதவிகிதம் பேர் ஹிஸ்பானிக்ஸ், 21 சதவிகிதம் பேர் ஆசியர்கள் மற்றும் 20 சதவிகிதம் பேர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்.

கேபி ஜார்ஜ் கேரளாவில் உள்ள கக்கோடு நகரத்தில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு ட்ரக் ட்ரைவர். ஒரு நாளைக்கு 150 ரூபாய்க்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பத்தில் பிறந்து, மண்ணெண்ணெய் விளக்கொளியில் படித்தவர் ஜார்ஜ். 

ரைஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோன்ஸ் கூறுகையில் ''ஜார்ஜ் அமெரிக்க வாழ் இந்தியர்களில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார். இது மாகாண மேயர்களை விட உயரிய பதவி" என்று குறிப்பிட்டார்.

"நாம் என்ன செய்துகொண்டோம் என்பதை விட மற்ற‌வர்களுக்கு என்ன செய்தோம் என்ற விஷயத்தில் தான் அதிக நம்பிக்கை உள்ளது" என ஜார்ஜ் தெரிவித்தார். 2010ம் ஆண்டு முதல் முறையாக கவுண்டி பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

"குற்றம் சாட்டுவதை விட அதனை பொதுச்சேவையில் நேர்மையாக வெளிப்படுத்துவேன். அமெரிக்காவுக்காக உழைக்க கடமைப்பட்டிருக்கிறேன். இந்த நாடு எனது கனவுகளை நிறைவேற்றும்" என்று தெரிவித்தார் ஜார்ஜ்.

.