தற்போதைக்கு, சுற்றுலா பயணிகளை வேறு இடத்துக்கு அனுப்ப முடியாத வகையில் நிலைமை இருக்கிறது.
Gangtok: இந்திய - சீனா எல்லையில் உள்ள சிக்கிமில், 3000-க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கடும் பனிப் பொழிவால் சிக்கிக் கொண்டதை அடுத்து, அவர்களை ராணுவம் மீட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர, பல ராணுவ வீரர்கள், அவர்களுடனேயே பயணித்துள்ளனர்.
இது குறித்து ராணுவத் துறை அமைச்சகம், ‘பனியால் சிக்கிக் கொண்ட சுற்றுலா பயணிகளில் பல பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். அவர்களுக்கு ராணுவத் தரப்பிடமிருந்து உடை மற்றும் உணவு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய- சீன எல்லையை ஒட்டியுள்ள நதுலா பாஸில் சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர். அது குறித்து ராணுவத்துக்குத் தகவல் வந்தவுடனேயே, அங்கு வீரர்கள் விரைந்தனர். தேவையான மீட்பு வாகனம் அனுப்பப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்' என்று தகவல் தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு, சுற்றுலா பயணிகளை வேறு இடத்துக்கு அனுப்ப முடியாத வகையில் நிலைமை இருக்கிறது. பனிப் பொழிவு குறைந்த பிறகு அனைவரும் பத்திரமான இடத்திற்கு ராணுவப் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.