This Article is From Aug 25, 2019

1,200 கி.மீ; 90 மணிநேர சைக்கிள் பயணம்: இந்திய ராணுவ அதிகாரி சாதனை

இந்திய ராணுவத்தில் லெப்டினெண்ட் ஜெனரல் பதவியில் உள்ள ஒருவர் இத்தகைய சாதனையை நிகழ்த்தியிருப்பது இதுவே முதல் முறை.

1,200 கி.மீ; 90 மணிநேர சைக்கிள் பயணம்: இந்திய ராணுவ அதிகாரி சாதனை

ட்விட்டரில் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.

பிரான்ஸில் பிரபல சைக்கிள் போட்டி முறையான “பாரீஸ் பிரெஸ்ட் பாரீஸ் சுற்று சைக்கிள் சவாரி” மிகவும் பழமையானதாகும். பாரீஸ் நகரத்திலிருந்து ஆரம்பித்து பிரான்ஸ் நாட்டின் கடற்கரை நகரான பிரெஸ்ட் வரை சென்று மீண்டும் பாரீஸ்க்கு திரும்பி வர 1200கி.மீ தொலைவு ஆகும். இந்த ஆண்டு நடந்த இந்த நிகழ்வில் இந்திய ஆயுதப் படையைச் சேர்ந்த துணைத்தளபதி ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.

இந்திய ராணுவ அதிகாரியான லெப்டினெண்ட் தளபதி அனில் புரி (56) 90 மணி நேரத்தில் கிலோமீட்டர் சைக்கிள் சவாரி செய்து  சாதனை செய்துள்ளார். இந்திய ராணுவத்தில் லெப்டினெண்ட் ஜெனரல் பதவியில் உள்ள ஒருவர் இத்தகைய சாதனையை நிகழ்த்தியிருப்பது இதுவே முதல் முறை. 

.