பாகிஸ்தான் தரப்பு, இந்திய எல்லையில் உளவு பார்ப்பதற்க்கா ட்ரோன் ஒன்றை அனுப்பி இருந்தது
புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது.
விதிமுறைகளை இந்திய விமானப்படை மீறியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று காலை முதல் புலம்பத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் அதிரடி சம்பவத்தை இந்திய ராணுவம் செய்திருப்பது உறுதியாகியுள்ளது.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 12 மிராஜ் 2000 என்ற ஜெட் போர் விமானம் 1,000 கிலோ எடை கொண்டு வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியுள்ளது.
சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை போன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் 100 சதவிகிதம் வெற்றிகரமாக முடிந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. அந்த அமைப்பு முகாம்கள் மீதும், லஷ்கர்-இ-தய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்புகள் முகாம்கள் மீதும் இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதையொட்டி பாகிஸ்தான் தரப்பு, இந்திய எல்லையில் உளவு பார்ப்பதற்க்கா ட்ரோன் ஒன்றை அனுப்பியுள்ளது. குஜராத் மாநில கட்ச் பகுதியின் அப்தாஸா கிராமத்தில்தான் இந்த உளவு ட்ரோனை பார்த்துள்ளது இந்திய ராணுவம். அதைக் கண்டவுடன் இந்திய தரப்பு சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிகிறது. இது குறித்து முன்னரே தகவல் வந்த நிலையில், தற்போது சுட்டு விழ்த்தப்பட்ட ட்ரோனின் அதிகாரபூர்வ படம் வெளியானது.
மேலும் படிக்க - "‘எல்லை தாண்டிய இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தோம்!' - தாக்குதலை மறுக்கும் பாக். ராணுவம்"