தேசிய அளவில், ஓம் பிரகாஷ் கத்தானா என்ற குண்டு எறிதல் வீரரின் சாதனையை முறியடித்துள்ளார் தஜிந்தர். 20.75 மீட்டர் தொலைவு குண்டு எறிந்து முதல் இடத்தை பிடித்தார். இதன் மூலம், இந்தியாவிற்கு 7வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது
அதனை தொடர்ந்து, ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதில், 3 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது. சவுரவ் கோஷல், தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர்
தடகளப் போட்டிகளை பொறுத்த வரையில், மகளிர் 400 மீட்டர் ஓட்டத்தில், இந்தியாவின் ஹீமா தாஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார். 50.79 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து தேசிய சாதனை படைத்தார். ஆண்கள் 400 மீட்டர் ஓட்டத்தில், 45.69 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து இந்தியாவின் முகமது அனஸ் வெள்ளிப்பதக்கம் வென்றார்
100 மீட்டர் தடகள போட்டியில், 11.32 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து, இந்தியாவின் டூட்டி சந்த் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம், 7 தங்கம், 10 வெள்ளி, 20 வெண்கலப் பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது