Read in English
This Article is From Oct 19, 2019

Army Chief: இந்திய பாதுகாப்புத்துறையின் ஏற்றுமதி 2024-ம் ஆண்டில் ரூ. 35,000 கோடியை எட்டும்

படிப்படியாக ஏற்றுமதி சார்ந்த பாதுகாப்பு துறையாக மாற்றி வருகிறோம். தற்போது நமது பாதுகாப்பு ஏற்றுமதியானது ஆண்டுக்கு சுமார் ரூ. 11,000 கோடி வரை உள்ளது. 2024 ஆம் ஆண்டில் ரூ. 35,000கோடியாக மாறும் என்றார்.

Advertisement
இந்தியா Edited by

நாட்டில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்கு திறன் கொண்டதாக இருக்கும் (File)

New Delhi:

இந்திய பாதுகாப்புத் துறை ஏற்றுமதி சார்ந்ததாக மாறி வருகிறது. நாட்டின் பாதுகாப்பு உற்பத்தியின் ஏற்றுமதிகள் ரூ. 35,000கோடி அளவுக்கு வளர்ந்து விடும் என்று ராணுவத் தலைவர் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 

“நாங்கள்  பாதுகாப்பு படைகளை புதுவித ஆயுதங்களால் முன்னேற்றமடையச் செய்வது மட்டுமல்லாமல் ஆயுதங்களையும் உபகரணங்களையும் உற்பத்தி செய்கிறோம். படிப்படியாக ஏற்றுமதி சார்ந்த பாதுகாப்பு துறையாக மாற்றி வருகிறோம். தற்போது நமது பாதுகாப்பு துறையின் ஏற்றுமதியானது ஆண்டுக்கு சுமார் ரூ. 11,000 கோடி வரை உள்ளது. 2024 ஆம் ஆண்டில்  ரூ. 35,000கோடியாக மாறும்  என்றார்.

ராவத் மற்றும்  கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் ஆகியோருடன் உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிகழ்வில் பேசினார்கள். 

நாட்டில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்கு ஆயுதப்படைகள் அவ்வாறு இவ்வாறு செயல்படும்போதுதான் நோக்கத்தை நிறைவேற்றும் திறன் கொண்டதாக இருக்கும். அதற்காக நன்கு பயிற்சி பெற்ற மனித வளம், வீரர்கள், கடற்படை தலைவர்கள், பயிற்சி பெற்ற விமான வீரர்கள் தேவை என்று ராவத் கூறினார்.

Advertisement

கடந்த சில ஆண்டுகளில் இந்திய பாதுகாப்புத் துறையை உற்சாகப்படுத்த ஏராளாமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்திய பாதுகாப்புத்துறை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது. தொழில்துறைக்கு ஒரு தெளிவான வழிநடத்தலை வழங்குவதற்காக ராணுவத்தின் பிரச்னைகள் மற்றும் தோல்வி குறித்த அறிக்கைகள் ஆண்டு தோறும் வெளியிடப்படுகின்றன.

அடுத்த பாதுகாப்பு துறைக் கண்காட்சி 2020 பிப்ரவரி முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் லக்னோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று ராவத் அறிவித்தார். அந்தக் கண்காட்சியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தனியார் நிறுவனங்கள் ஆதரிக்கும் பாதுகாப்பு தொழில்கள் ஆகியவை தங்களின் மதிப்பை வெளிப்படுத்தும் 

Advertisement

பல நவீன தொழில்நுட்பங்கள் காட்சிக்கு வைக்கப்படும். காட்சிக்கு வைக்கக்கூடிய சில உபகரணங்களை சான்றளிக்க நாங்கள் முன்வருவோம் என்று ராவத் கூறினார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement