This Article is From Aug 23, 2019

''இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அமெரிக்கா, சீனாவை விட அதிகம்'' - நிர்மலா சீதாராமன்!!

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்திருக்கிறார்.

''இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அமெரிக்கா, சீனாவை விட அதிகம்'' - நிர்மலா சீதாராமன்!!

பொருளாதார மந்த நிலை என்று கூறப்படுவதை அமைச்சர் மறுத்துள்ளார்.

New Delhi:

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அமெரிக்கா, சீனாவை விட அதிகம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு பொருளாதார பிரச்னைகள் குறித்து விளக்கம் அளித்தார். 

நிதியமைச்சர் தனது பேட்டியில் கூறியதாவது-

சர்வதேச அளவில் பொருளாதார பிரச்னை என்னவாக இருக்கிறது என்பதை விளக்க விரும்புகிறேன். பொருளாதார வளர்ச்சி விகிதம் சர்வதேச அளவில் 3.2-ஆக உள்ளது. உலக அளவில் பொருட்களின் தேவை குறைவாக இருப்பதாக பல நிறுவனங்கள் கூறுகின்றன. 

அமெரிக்கா மற்றம் சீனா இடையே நடந்து வரும் பொருளாதார மோதல் காரணமாக, சீனாவின் நாணய மதிப்பு குறைந்துள்ளது. இது சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அமெரிக்கா மற்றும் சீனாவை விட அதிகமாக இருக்கிறது. வளத்தை உருவாக்குபவர்களுக்கு மதிப்பு அளிக்கப்படும் என்று மோடி கூறியதை இங்கு கூறிக் கொள்கிறேன். 

இந்தியாவில் வர்த்தகத்தை எளிமைப்படுத்தும் நடவடிக்கை கடந்த 2014-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொழிலாளர் மற்றும் வரி தொடர்பான சீர்த்திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும். 

வருமான வரி தாக்கல் செய்வது இன்னும் எளிமைப்படுத்தப்படும். இதனை எய்ப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சிறு குறு தொழிலாளர்களுக்கு நலனை ஏற்படுத்தும். 
இவ்வாறு அவர் தெரிவித்தார். 

.