பக்ரீத் தினத்தில் இந்திய பொறியாளர் ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்கொலை! (Representational)
Dubai: ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து இந்தியாவை சேர்ந்த 24 வயது பொறியாளர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த அந்த நபர் மின் பொறியாளர் சுமேஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கேரளாவை சேர்ந்தவர் என்று கலீஜ் டைம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
சுமேஸ் சார்ஜாவின் அல் தாகித்தில் உள்ள பகுதியில் வசித்து வந்துள்ளார். அங்கிருந்து வெள்ளியன்று, அவர் கீழே விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, போனில் பேசிக்கொண்டிருந்ததாகவும், போனை தூக்கி வீசியதாகவும் கூறுகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பு வந்த சுமேஷ், சார்ஜாவின் முவேயில்லா பகுதியில் வடிவமைப்பு பொறியாளராக உள்ளார்.
இதுதொடர்பாக அவரது அறையை சேர்ந்தவர்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாகவே சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக தொந்தராவாக இருந்துவந்தார்.
பக்ரீத் தினம் காரணமாக எங்களது சமையல்காரர் பிரியாணி செய்திருந்தார். நாங்கள் நகைச்சுவைகளை பரிமாறிக்கொண்டிருந்தோம். சுமேஷூம் எங்களுடன் சிரித்துக்கொண்டுதான் இருந்தார்.
எனினும் சில சமயம் அவர் ஏதோ தொந்தரவில் இருப்பது போல் இருந்தார். அவரிடம் இது குறித்து கேட்டபோதும், எதுவும் கூற மறுத்துவிட்டார் என அவரது அறை நண்பர் திலீப் குமார் தெரிவித்துள்ளார்.
மற்றொரு அறை நண்பரான சான்ஸ் கூறும்போது, சுமேஷ் அவரது ஆண்டு விடுமுறைக்கு இந்திய செல்ல இருந்தார். ஆனால், கொரோனா காரணமாக அவரால் செல்ல முடியவில்லை என்றார்.
தொடர்ந்து, சடலத்தை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணையை துவங்கியுள்ளனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)