சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும், தடயவியல் மருத்துவர்கள் கூறியதன் அடிப்படையிலும், இது தற்கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Dubai: இந்தியாவை சேர்ந்த மென்பொறியாளர் ஒருவர் துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக துபாய் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி மாலிக் கூறும்போது, கடந்த திங்கள்கிழமையன்று 24வது மாடியில் இருந்து குதித்து ஒருவர் உயிரிழந்ததாக ஓயாசிஸ் சிலிக்கான் வளாக செக்யூரிட்டியிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது.
அந்த இளைஞர் செக்யூரிட்டியிடம் தான் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு பார்க்க வந்ததாக கூறி வீட்டு சாவிகளை வாங்கி சென்றுள்ளார். தொடர்ந்து, வீட்டின் பால்கனிக்கு சென்ற அவர், தனது ஷூ மற்றும் மொபைல் போனை வைத்துவிட்டு அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீஸ் அதிகாரி மாலிக் கூறியதாக வளைகுடா செய்திகள் தெரிவிக்கின்றன.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும், தடயவியல் மருத்துவர்கள் கூறியதன் அடிப்படையிலும், இது தற்கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த அந்த இளைஞர் கேரளாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் ஆகஸ்ட் 2018ம் ஆண்டு முதல் மின் பொறியியல் நிறுவனத்தில் நகர திட்டமிடல் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
துபாயில் அவர் தனது மூத்த சகோதரரின் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. எனினும், அவரது தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் தெரியவில்லை.