This Article is From Jan 09, 2020

“போராடுற முஸ்லீம்கள பாகிஸ்தானுக்கு அனுப்பணும்..!”-CAA ஆதரவு கூட்டத்தில் ராதாரவி சர்ச்சை பேச்சு!

"அவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு போய் பாகிஸ்தானில் விட்டுவிட வேண்டும்"- Radha Ravi

Advertisement
தமிழ்நாடு Written by

"அங்கு இருக்கும் முஸ்லீம்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்களா?"- Radha Ravi

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அமலாகியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு (CAA) எதிராகவும் ஆதரவாகவும் தொடர்ந்து பேரணிகளும், கூட்டங்களும் நடந்து வருகின்றன. சிஏஏ மூலம், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை கொடுக்கப்படும். இந்தச் சட்டம் மதப் பாகுபாடுடன் இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆளுங்கட்சி, இந்திய முஸ்லீம்களுக்கு இந்தச் சட்டத்தினால் பாதிப்பு கிடையாது என்று கூறுகிறது. இப்படி சிஏஏவுக்கு ஆதரவாக சென்னையில் நடந்த கூட்டத்தில் சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ராதாரவி (Radha Ravi), சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். 

அவர், “நான் சென்னையில் இருக்கும் முஸ்லீம் கல்லூரியான நியூ காலேஜில்தான் படித்தேன். முஸ்லீம் சகோதரர்களுடன் எனக்கு நல்லப் பழக்கம் உள்ளது. சிஏஏ, முஸ்லீம்களுக்கு எதிரானது என்பது போல தொடர்ந்து பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சட்டம் இங்கிருக்கும் முஸ்லீம்களுக்கு எதிராக செயல்படுத்தப்படாது என்று மத்திய அரசு உறுதி கொடுத்த பின்னரும், தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனக்குப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் முஸ்லீம்களைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. 

அவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு போய் பாகிஸ்தானில் விட்டுவிட வேண்டும். அங்கு இருக்கும் முஸ்லீம்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்களா. அல்லது ஆப்கானிஸ்தான் அல்லது வங்கதேசத்தில் உங்களை இறக்கிவிட்டால், அங்கிருக்கும் முஸ்லீம்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்களா. ஆனால், உங்களை ஏற்றுக் கொள்ளும் இந்த நாட்டிற்கு எதிராக நீங்கள் போராடுகிறீர்கள்.

Advertisement

நான் இன்று சொல்கிறேன். இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்களுக்கு இந்த சிஏஏ சடத்தால் பாதிப்பு ஏற்பட்டால், நானே இஸ்லாமியனாக மதம் மாறுகிறேன். நானே தலைமை தாங்கி மதமாற்றம் செய்கிறேன்,” என்றார்.

Advertisement