Read in English
This Article is From Sep 26, 2018

‘இந்திய கடற்படை உதவியால் உயிர் பிழைத்தேன்’- மீட்கப்பட்ட அபிலாஷ் உருக்கம்

இந்திய கடற்படையால் மீட்கப்பட்ட மாலுமி அபிலாஷுக்கு (Abhilash Tomy) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
இந்தியா Posted by (with inputs from ANI)

மாலுமி அபிலாஷ் டாமி

New Delhi:

மாலுமி அபிலாஷ் டாமி  (Abhilash Tomy)  என்பவர் கடற்பயணம் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் கோல்டன் குளோப் எனப்படும் உலகத்தை தனியாக சுற்றிவரும் போட்டியில் கலந்து கொண்டு உலகை சுற்றும் சாகசத்தில் ஈடுபட்டார்.
ஆனால் துரதிருஷ்டவசமாக மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவரது ‘துரியா’ என்ற படகு புயலின் தாக்குதலுக்கு ஆளானது. இதில் துண்டு துண்டாக படகு உடைந்தது. இதனால் கடும் பாதிப்புக்கு ஆளான டாமியை இந்திய கடற்படையும் ( Indian Navy), சர்வதேச கடற்படையினரும் சேர்ந்து கடந்த வெள்ளியன்று பத்திரமாக மீட்டனர்.

படுகாயம் அடைந்திருக்கும் அவருக்கு ஆஸ்திரேலிய கடற்பகுதியில் அமைந்துள்ள தீவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரை சந்தித்த கடற்படை அதிகாரிகளிடம் பேசிய அபிலாஷ், “ எனது கடற்பயண திறமைகளால் கடலின் பிடியில் இருந்து என்னை தற்காத்துக் கொண்டேன். என்னை மீட்டது கடற்படைதான். எனவே அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
 

Advertisement