குண்டுவெடிப்பை தொடர்ந்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.
New Delhi: தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய விசாரணை அதிகாரிகள் இலங்கையில் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்பில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே இலங்கையில் குண்டுவெடிப்பு நடத்திய தீவிரவாதிகள் இந்தியாவுக்கு வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக அவர்கள் காஷ்மீரில் பயிற்சி மேற்கொண்டதாக கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தென்னிந்தியாவின் சில பகுதிகளில் சோதனை வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில், தேசிய புலனாய்வு அதிகாரிகள் இலங்கை சென்றுள்ளனர். அங்கு இலங்கை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டனர்.
குண்டுவெடிப்புக்கு முதலில் தேசிய தவ்ஹீத் ஜமாத் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இதற்கு பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த சம்பவம் நடந்து ஒரு மாத காலமாக, இலங்கையில் அவசர நிலை நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.