This Article is From Aug 02, 2018

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு கணிதத்துக்கான ‘நோபல் பரிசு’!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அக்‌ஷய் வெங்கடேஷ் என்பவர் ‘கணிதத்துக்கான நோபல் பரிசு’ என்றழைக்கப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வென்றுள்ளார்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு கணிதத்துக்கான ‘நோபல் பரிசு’!

ஹைலைட்ஸ்

  • அக்‌ஷய் வெங்கடேஷ், ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வென்றுள்ளார்
  • ஃபீல்ட்ஸ் பதக்கம்தான் கணிதத்துக்கான நோபல் பரிசாக கருதப்படுகிறது
  • அக்‌ஷய், தற்போது ஸ்டான்போர்டு பல்கலை.,யின் பேராசிரியாக இருக்கிறார்
New York:

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அக்‌ஷய் வெங்கடேஷ் என்பவர் ‘கணிதத்துக்கான நோபல் பரிசு’ என்றழைக்கப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வென்றுள்ளார்.

36 வயதாகும் அக்‌ஷய், புது டெல்லியில் பிறந்தவர். 2 வயதாக இருக்கும் போதே, அவரது பெற்றோர் அக்‌ஷயை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். 12 வயதின்போதே இயற்பியல் மற்றும் கணிதத்துக்கான ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்றார் அக்‌ஷய். 13 வயதிலேயே ஹை-ஸ்கூல் படிப்பை முடித்தார் அக்‌ஷய். மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழத்தில் கணிதத்துக்கான இளங்களைப் பட்டத்தை 16 வயதில் பெற்றார். 20 வது வயதில் முனைவர் பட்டம் பெற்றார். தற்போது ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இப்படி சிறு வயது முதல் கணிதத்துக்காக முழுக்க முழுக்க தன்னையே அற்பணித்துக் கொண்டவர் அக்‌ஷய். இதுவரை அவர், ஆஸ்ட்ராவஸ்கி பரிசு, இன்போசிஸ் பரிசு, சேலம் பரிசு, சாஸ்த்ரா ராமானுஜம் பரிசு ஆகியவற்றை வென்றுள்ளார். இந்நிலையில், ஃபீல்ட்ஸ் பதக்கத்தையும் அவர் வாங்கியுள்ளார். 

கனடாவின் கணிதவியலாளரான ஜான் சார்லஸ் ஃபீல்ட்ஸ், 1924 ஆம் ஆண்டு கணிதத்துக்கான காங்கிரஸ் அமைப்பை டொரான்டோ நகரில் நடத்தி வந்தார். அவர்தான் 1932 ஆம் ஆண்டு, கணிதத் துறையில் சாதிப்பவர்களுக்கு பரிசு கொடுக்கப்பட வேண்டும் என்ற யோசனையை முன் மொழிந்தார். 

இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் கணிதத் துறையில் சாதிக்கும் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 2 பேருக்கும் அதிகபட்சம் 4 பேருக்கும் இந்த விருது வருடா வருடம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அக்‌ஷய் வெங்கடேஷ், ஈரானிய-குர்தீஷ் வம்சாவளியைச் சேர்ந்த சாஷர் பிர்கார், ஜெர்மனியின் பீட்டர் ஷோல்ஸ், இத்திலாயின் அலிசியோ ஃபிகாலி ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 15,000 கனடா டாலர் பரிசுத் தொகையும் பதக்கத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

.