বাংলায় পড়ুন Read in English
This Article is From Sep 25, 2019

Swachh Bharat முன்னெடுப்புக்காக Bill Gates கையில் விருது வாங்கிய பிரதமர் நரேந்திர மோடி!

Swachh Bharat Mission: கடந்த 2014 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) திட்டத்தை, மகாத்மா காந்தியின் பிறந்தநாளின் போது ஆரம்பித்தது இந்திய அரசு.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • PM Modi-க்கு Goalkeepers Global Award விருது வழங்கப்பட்டது
  • Microsoft நிறுவனர Bill Gates மோடிக்கு விருதை வழங்கினார்
  • "காந்திஜியின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது," பிரதமர் மோடி
New Delhi:

இந்திய அரசின் ஸ்வச் பாரத் (Swachh Bharat - தூய்மை இந்தியா) திட்டத்திற்காக Goalkeepers Global Goals Award என்ற விருதைப் பெற்றார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi). மைக்ரோசாஃப்ட் மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates), இந்த விருதை பிரதமர் மோடியிடம் வழங்கினார். 

‘உலக அளவில் தலைவர்களை ஒன்றிணைத்து வளர்ச்சியை துரிதப்படுத்தி வறுமை மற்றும் ஏற்றத் தாழ்வுகளைப் போக்க' இந்த விருதை பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை வழங்கி வருகிறது. 

விருதை வாங்கிய பிரதமர் மோடி, “காந்திஜியின் சுத்தம் மற்றும் சுகாதாரம் தற்போது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. தூய்மை இந்தியா திட்டம் மூலம் 3 லட்சம் மக்கள் காப்பாற்றப்பட்டு உள்ளார்கள் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இதைப் போன்ற ஒரு முன்னெடுப்பு முன்னெப்போதும் எடுக்கப்பட்டதில்லை. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த ஆண்டில் இந்த விருதை வாங்குவது எனக்குப் பெருமையாக உள்ளது. 130 கோடி மக்கள் முன்வந்தால், எந்த சவாலையும் எதிர்கொள்ளலாம்” என்று பேசினார். 

Advertisement

கடந்த 2014 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) திட்டத்தை, மகாத்மா காந்தியின் பிறந்தநாளின் போது ஆரம்பித்தது இந்திய அரசு. கிராமங்களில் திறந்தவெளி மலம் கழித்தலை ஒழித்தல், திட மற்றும் திரவ குப்பைகளை திறம்பட நிர்வகித்தல் நோக்கங்களைக் கொண்டன தூய்மை இந்தியா திட்டம். 

தனது உரையில் மோடி, மேலும் பேசுகையில், “கழிவறைகள் இல்லாத காரணத்தால் பல பெண்கள் தங்களது படிப்பைப் பாதியிலேயே நிறுத்திக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. தூய்மை இந்தியா திட்டம் அதை மாற்றியுள்ளது. இந்தத் திட்டத்தை திறம்பட அமல் செய்வதில் இந்தியாவில் இருக்கும் மாநிலங்களுக்கு இடையில் ஆரோக்கியமான போட்டி நிலவுவது மகிழ்ச்சி அளிக்கின்றது” என்றார். 

Advertisement

2017 ஆம் ஆண்டு, இந்த கோல்கீப்பர் விருது வழங்கும் விழா முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா, செயற்பாட்டாளர் மலாலா யூசஃப்சாய் உள்ளிட்டோர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 


 

Advertisement