Read in English
This Article is From Sep 08, 2020

இந்திய படையினர் பாங்காங் ஏரியின் கரையில் துப்பாக்கிச் சூடு! எல்லையில் தொடரும் பதற்றம்!!

இதை "மிகவும் மோசமான இயல்புடைய தீவிரமான ஆத்திரமூட்டல்" என்று அழைத்த சீனா, "ஆபத்தான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு இந்திய தரப்பை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

நேற்று லடாக்கின் பாங்கோங் ஏரியின் தென் கரையில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்த இந்திய வீரர்கள் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டதாக சீனா கூறியுள்ளது. "சீன எல்லைக் காவலர்கள் நிலைமையை உறுதிப்படுத்த எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்று மக்கள் விடுதலை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த எதிர் நடவடிக்கைகள் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்திய தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலானது சமீபகாலங்களில் கூர்மையடைந்து வருகின்றது.

மக்கள் விடுதலை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்திய இராணுவம் "சட்டவிரோதமாக எல்.ஏ.சி யைக் கடந்து பாங்காங் ஏரியின் தென் கரையிலும் ஷென்பாவ் மலைப் பகுதியிலும் நுழைந்தது இந்த நடவடிக்கையின் போது, ​​இந்திய இராணுவம் பிரதிநிதித்துவப்படுத்திய சீன எல்லைக் காவலர்களின் ரோந்துப் பணியாளர்களுக்கு அப்பட்டமாக அச்சுறுத்தல்களை விடுத்தது, மேலும் சீன எல்லைக் காவலர்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்த எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது". என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement

இதை "மிகவும் மோசமான இயல்புடைய தீவிரமான ஆத்திரமூட்டல்" என்று அழைத்த சீனா, "ஆபத்தான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு இந்திய தரப்பை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

கடந்த வாரம் சீன துருப்புக்கள் அத்துமீறல்களுக்குப் பிறகு, வெளியுறவு அமைச்சகம், இந்தியா ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாக பிரச்னைக்கு தீர்வு காண விரும்புவதாகவும், தவறும் பட்சத்தில் ராணுவமும் முழு தயார் நிலையில் உள்ளது என்றும் ராணுவ தளபதி நரவாணே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement
Advertisement