ஜூலை 1 ம் தேதி MOM செவ்வாய் கிரகத்தில் இருந்து 7,200 கி.மீ தொலைவிலும், போபோஸிலிருந்து 4,200 கி.மீ தூரத்திலும் இருந்தபோது படம் எடுக்கப்பட்டது.
Bengaluru: செவ்வாய் கோளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2013 நவம்பர் 5 அன்று வெற்றிகரமாகச் செலுத்தப்பட்ட ஆளில்லாத விண்கலமான Mars Orbiter Mission, 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய்க் கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது.
இந்நிலையில் செவ்வாய் கலர் கேமரா (Mars Colour Camera) செவ்வாய் கிரகத்தின் மிக நெருக்கமான மற்றும் மிகப்பெரிய சந்திரனான போபோஸினை புகைப்படமாக பதிவு செய்துள்ளது. ஜூலை 1 ம் தேதி MOM செவ்வாய் கிரகத்தில் இருந்து 7,200 கி.மீ தொலைவிலும், போபோஸிலிருந்து 4,200 கி.மீ தூரத்திலும் இருந்தபோது படம் எடுக்கப்பட்டது.
படத்தின் இடஞ்சார்ந்த தீர்மானம் 210 மீ. இது 6 எம்.சி.சி பிரேம்களிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு கலப்பு படம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. செவ்வாயின் நிலவான போபோஸ் பெரும்பாலும் கார்பனேசிய காண்டிரைட்டுகளால் ஆனது என்று நம்பப்படுகிறது.
இந்த துனை கோளானது எரிகற்கள் மற்றும் விண்வெளி கற்களால் சேதமடைந்து ஒழுங்கற்ற அமைப்புடன் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்டோக்னி, போபோஸின் மிகப்பெரிய பள்ளம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த மங்கள்யான் திட்டமானது ஆரம்பத்தில் ஆறு மாதங்கள் நீடிக்கும் என்று கருதப்பட்டது, ஆனால் பின்னர் இஸ்ரோ "பல ஆண்டுகள்" நீடிக்க போதுமான எரிபொருள் இருப்பதாகக் கூறியது.
லைமன் ஆல்ஃபா ஃபோட்டோமீட்டர் (எல்ஏபி), செவ்வாய் கிரகத்திற்கான மீத்தேன் சென்சார் (எம்எஸ்எம்), செவ்வாய் எக்ஸோஸ்பெரிக் நியூட்ரல் கலவை அனலைசர் (மென்சா), மார்ஸ் கலர் கேமரா (எம்சிசி) மற்றும் வெப்ப அகச்சிவப்பு இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர் (டிஐஎஸ்) என மார்ஸ் ஆர்பிட்டரில்(Mars Orbiter Mission) ஐந்து அறிவியல் கருவிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.