This Article is From Jun 13, 2019

''சொந்த முயற்சியில் விண்வெளி மையத்தை இந்தியா அமைக்கிறது'' - இஸ்ரோ தகவல்

ககன்யான் திட்டத்தின் நீட்சியாக விண்வெளியில் சொந்த முயற்சியில் இந்தியா விண்வெளி மையத்தை அமைக்கிறது. இது 2030-க்குள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளி மையம் அமைப்பதற்கு மற்ற நாடுகளின் முயற்சியை இந்தியா நாடவில்லை.

New Delhi:

சொந்த முயற்சியில் இந்தியா விண்வெளி மையத்தை அமைக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. ககன்யான் திட்டத்தின் நீட்சியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு எந்தவொரு நாட்டின் உதவியையும் இந்தியா நாடவில்லை என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்திருக்கிறார். 

விண்வெளியில் சுமார் 20 டன் எடையில் விண்வெளி மையம் அமைக்கப்படும். இதனை 2030-க்குள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா ககன்யான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் முழுமையடைந்த பின்னர் விண்வெளி மையம் அமைப்பது குறித்த முழு விவரங்கள் வெளி வரும். 

முன்னதாக ககன்யான் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. சந்திரயான் - 2 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. 


ஜூலை  15-ம்தேதி சந்திரயான் 2 புறப்பட்டு நிலாவின் தெற்கு முனையில் தரையிரங்கும். சந்திரயான் 1-ன் மேம்படுத்தப்பட்ட திட்டம்தான் இந்த சந்திரயான் 2- ஆகும். 

உலக நாடுகளுக்கு புவிக்கு அருகே சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த 1998-ல் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இங்கு விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சில சமயங்களில் சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். 

.