Read in English
This Article is From Nov 02, 2019

அமெரிக்க குடியுரிமை நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சி! இந்திய மென்பொருள் பொறியாளர் உயிரிழப்பு!!

Piedmont Area Telugu Association (PATA) என்ற அமைப்பு ராஜுவின் மனைவிக்கு உதவி செய்வதற்காக வலைதள பக்கத்தை ஆரம்பித்துள்ளது. அதில், ராஜுவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல நிதியுதவி வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

Advertisement
இந்தியா Edited by

#DurbinWidow, #DurbinOrphan  என்ற ஹேஷ்டேக்குகளில் ட்விட்டரில் தகவல்கள் பகிரப்படுகின்றன. 

Washington:

அமெரிக்காவில் குடியுரிமை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த இந்திய மென்பொருள் பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார். குடியுரிமை இழந்ததன் காரணமாக அவரது கர்ப்பமான மனைவி இந்தியா திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் சிவா சாலபதி ராஜு என்ற மென் பொருள் பொறியாளர் ஹைபாயின்ட் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஆரேக்கிள் டெவலப்பர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. 

ஏற்கனவே அவருக்கு அமெரிக்காவின் குடியுரிமையான கிரீன் கார்டு வாங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தற்காலிகமாக குடியுரிமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் சிவாவின் உயிர் பிரிந்தது. இதையடுத்து குடியுரிமை இழந்ததால் அவரது கர்ப்பமுற்ற மனைவி பாபி சோஜன்யா பரிதவித்து வருகிறது. 

Advertisement

சோஜன்யாவை இந்தியாவுக்கு அனுப்வி வைக்கும் முயற்சியில் சிவாவின் நண்பர்களும், சமூக வலைதள பயன்பாட்டாளர்களும் ஈடுபட்டுள்ளனர். 

இதையொட்டி #DurbinWidow, #DurbinOrphan  என்ற ஹேஷ்டேக்குகளில் ட்விட்டரில் தகவல்கள் பகிரப்படுகின்றன. 

Advertisement

Piedmont Area Telugu Association (PATA) என்ற அமைப்பு ராஜுவின் மனைவிக்கு உதவி செய்வதற்காக வலைதள பக்கத்தை ஆரம்பித்துள்ளது. அதில், ராஜுவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல நிதியுதவி வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 

Advertisement