This Article is From May 13, 2019

துபாயில் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் இறந்த இந்திய பெண்

இறந்த பெர்னாண்டஸ் பிறப்பு முதல் அவருடைய இடுப்பு எலும்பு சற்று இடம்பெயர்ந்து விட்ட இருந்தது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ளார்.

துபாயில் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் இறந்த இந்திய பெண்

சமையல் நிபுணராக துபாயில் பணிபுரிந்து வருகிறார்.

Dubai:

துபாயில் இந்திய பெண் செஃப் ஒருவர் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இறந்து விட்டதாக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

பெட்டி ரீடா பெர்னாண்டஸ் 42, இரண்டு குழந்தைகளின் தாயான இவர் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் இரண்டு மணி நேரத்தில் அனுமதிக்கப்பட்டார் என்று வளைகுடா செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. 

அல் சகாரா மருத்துவமனையில் மே 9 அறுவை சிகிச்சை நடந்துள்ளது. குடும்பத்தினர் அனைவரும் வெளிப்படையாக கூறி இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று மருத்துவமனை நிர்வாக தெரிவிக்கிறது. இந்த சம்பவம் தற்போது துபாய் சுகாதார ஆணையம் மற்றும் இண்டர்நேஷன்ல் கூட்டு  ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் படி பல தரப்பட்ட மதிப்பாய்வு விசாரணைகளை செய்ய தூண்டியுள்ளது. 

இறந்த பெர்னாண்டஸ் தன் பிறப்பு முதல் அவருடைய இடுப்பு எலும்பு சற்று இடம்பெயர்ந்து விட்ட இருந்தது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ளார். 

இடுப்பு மாற்ற அறுவை சிகிச்சை நிபுணர் சமித் தாராபிகியின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய முன்வந்துள்ளார். பெர்னாண்டஸின் கணவர் கொடுத்த வழக்கின் கீழ், தற்போது இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. 

.