This Article is From Aug 28, 2018

தடகளத்தில் மேலும் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனைகள்

18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன

தடகளத்தில் மேலும் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனைகள்

18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. 9வது நாளான இன்று, தடகள போட்டிகளில் 2 வெள்ளிப் பதக்கங்களை இந்திய வீராங்கனைகள் கைப்பற்றியுள்ளனர்

இன்று நடைப்பெற்ற பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபில்சேஸ் போட்டியில், இந்திய வீராங்கனை சுதா சிங் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

9.40 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான சிந்தா, 10.26 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 11வது இடம் பிடித்தார்.

அதைப் போன்று, பெண்களுக்கான நீளம் தாண்டுதல் தடகள போட்டியில், இந்தியாவின் நீனா வரகில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். போட்டியில், 6.51 மீட்டர் பதிவு செய்து இரண்டாம் இடம் பிடித்தார்.

இதன் மூலம், பதக்க பட்டியலில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா, 8 தங்கம், 13 வெள்ளி, 20 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 41 பதக்கங்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

.