Read in English
This Article is From Nov 02, 2019

அமெரிக்காவில் மலைப்பாம்பு கழுத்தில் சுற்றிய நிலையில் பெண்ணொருவர் மரணம்

‘பாம்பு கழுத்தை நெரித்ததாக தெரிகிறது.’ பிரதேச பரிசோதனைக்கு பின்பே உண்மை தெரிய வரும் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement
உலகம் Edited by

லாரா ஹர்ஸ்டின் சடலம் ஆக்ஸ்போர்டில் அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது

Washington:

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான இந்தியானா மகாணத்தில் 36 வயதான பெண்ணொருவர் மலைபாம்பு கழுத்தில் சுற்றியிருந்த நிலையில் இறந்து கிடந்தார். அப்பெண் தன் வீட்டில் 140 பாம்புகளை வளர்த்து வருகிறார்.

இறந்த லாரா ஹர்ஸ்டின் சடலம் ஆக்ஸ்போர்டில் அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்று காவல்துறை செய்தி தொடர்பாளர் சார்ஜெண்ட் கிம் ரிலே தெரிவித்துள்ளார்.

எட்டு நீளம் கொண்ட மலைப்பாம்பு கழுத்தில் சுற்றிக் கிடந்த நிலையில் மருத்துவர்கள் அப்பெண்ணை உயிர்பிக்க முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. ‘பாம்பு கழுத்தை நெரித்ததாக தெரிகிறது.' பிரதேச பரிசோதனைக்கு பின்பே உண்மை தெரிய வரும் என்று தெரிவித்துள்ளனர்.

பாம்பு சேகரிப்புடன் கூடிய அந்த வீடு பெண்டன் கவுண்டி ஷெரிப், டான் முன்சன் ஆகியோருக்கு சொந்தமானது. ஹர்ஸ்டின் உடலைக் கண்ட முன்சன் அவரது மரணம் ஒரு சோகமான விபத்து என்று கூறியுள்ளார்.

இந்த வகை மலைப்பாம்பு விஷமற்ற தன்மை கொண்டது. ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படும் பாம்பு வகையாகும். இந்த வகைப் பாம்பும் தன் இரையை இறுக்கமாக அழுத்தி அதற்கு மாரடைப்பு வரச்செய்து கொல்லும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement