This Article is From Dec 22, 2019

வங்கி கணக்கிலும் மதத்தை குறிப்பிட வேண்டுமா? நிதி அமைச்சகம் விளக்கம்!

இதுதொடர்பாக நிதி அமைச்சகத்தின், நிதி சேவைகள் துறை செயலாளர் ராஜீவ் குமார் தனது ட்வீட்டரில் கூறியதாவது, இந்திய குடிமக்கள் தங்கள் மதத்தை புதிதாக திறக்க உள்ள வங்கி கணக்கு/இருக்கும் வங்கி கணக்கு அல்லது kYCக்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறியுள்ளார்.

வங்கி கணக்கிலும் மதத்தை குறிப்பிட வேண்டுமா? நிதி அமைச்சகம் விளக்கம்!

இந்திய குடிமக்கள் வங்கியில் (kyc) படிவத்தில் மதத்தை குறிப்பிட வேண்டும் என்ற வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

New Delhi:

இந்திய குடிமக்கள் தங்கள் வங்கியின் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் (KYC) படிவத்தில் தங்கள் மதத்தை குறிப்பிட வேண்டும் என்று வதந்திகள் பரவிய நிலையில், மத்திய அரசு அதற்கு உரிய விளக்கம் அளித்துள்ளது. 

இதுதொடர்பாக நிதி அமைச்சகத்தின், நிதி சேவைகள் துறை செயலாளர் ராஜீவ் குமார் தனது ட்வீட்டரில் கூறியதாவது, இந்திய குடிமக்கள் தங்கள் மதத்தை புதிதாக திறக்க உள்ள வங்கி கணக்கு/இருக்கும் வங்கி கணக்கு அல்லது kYCக்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறியுள்ளார். 
 
மேலும், அவர் வங்கிகள் அப்படி எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொண்டதாக வரும் வதந்திகளை நம்பாதீர்கள் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்துவ அகதிகள், நீண்ட கால விசாக்களை (LTVs) வைத்திருப்பவர்கள் வங்கியின் கே.ஒய்.சி படிவங்களில் தங்கள் மதத்தை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

.