This Article is From Nov 20, 2018

குடியுரிமைக்காக போலி திருமணம்: இந்தியர்களை எச்சரிக்கும் ஆஸ்திரேலியா!

4 ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்கள் சட்டத்துக்கு விரோதமாக ஆஸ்திரேலிய குடியுரிமை இல்லாதவர்களுக்கு திருமணம் மூலம் குடியுரிமை பெற்றுத்தரும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

குடியுரிமைக்காக போலி திருமணம்: இந்தியர்களை எச்சரிக்கும் ஆஸ்திரேலியா!

இதேபோன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் 164 பார்ட்னர் விசாக்கள் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

New Delhi:

"இந்தியர்கள் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக செய்யும் திருமணங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படை சிட்னியில் 32 வயதான இந்தியர் ஒருவர் இஒது போன்ற சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டதை கண்டறிந்துள்ளது.

4 ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்கள் சட்டத்துக்கு விரோதமாக ஆஸ்திரேலிய குடியுரிமை இல்லாதவர்களுக்கு திருமணம் மூலம் குடியுரிமை பெற்றுத்தரும் செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆணையம் கோலி திருமண ஊழல்களுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

இதேபோன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் 164 பார்ட்னர் விசாக்கள் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் உள்ளவர்கள் யாருக்கும் நிரந்தர முகவரி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிலர் இதுக்காக எந்தவித விசாரணையிலும் சிக்கக்கூடாது என்று அதிக தொகையை லஞ்சமாக கொடுத்துள்ளனர். 

இந்தக் குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ளவர்களில் தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் தான் அதிகம் என்றும், அதில் இந்தியர்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறைந்த பொருளாதார பின்னணியில் உள்ள ஆஸ்திரேலிய குடிமகன்கள் இந்தக் குற்றங்களில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் ஈடுபடும் ஆஸ்திரேலிய பெண்கள் குடும்ப வன்கொடுமைகள், நிதி நெருக்கடி உள்ளவர்களாக இருக்கின்றனர் என்று ஆஸ்திரேலிய ஆணையம் தெரிவித்துள்ளது. 

.