বাংলায় পড়ুন Read in English
This Article is From Aug 04, 2018

இந்தியாவின் முதல் ‘பேபி ஸ்பா’!- ஹைதராபாத்தில் துவக்கம்

உங்கள் குழந்தைகளுக்கு வேண்டிய மசாஜ், உடற்பயிற்சி, தெரபி என எதுவானலும் இந்த ஸ்பாவில் உங்களுக்குக் கிடைக்கும்.

Advertisement
நகரங்கள்
Hyderabad:

வேளைப்பளுவால் இந்த வாரம் கடிமானதாக மாறிப்போயிருக்கும் போது ஒரு நல்ல ‘ஸ்பா’வுக்குச் சென்று கொஞ்சம் ரிலாக்ஸ் செய்தால் எப்படி இருக்கும்!! ஆனால், உங்களுக்கு இருக்கும் டென்ஷன், மனஅழுத்தம் எல்லாம் உங்கள் குழந்தைகளுக்கும் இருக்கும் என யோசித்திருக்கிறீர்களா? குழந்தைகளின் மனஅழுத்தத்தைப் போக்கி அவர்கள் உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியத்துடனும் நல்ல அறிவாற்றலுடனும் திகழ் ஹைதராபாத்தில் புதிதாக குழந்தைகளுக்கு என்றே பிரத்யேக ஸ்பா ஒன்று திறக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே குழந்தைகளுக்கான மன அழுத்தத்தை நீக்கி அவர்களின் உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு பிரத்யேக ஸ்பா தற்போது ஹைதராபாத்தில் தான் அமையப்பெற்றுள்ளது.

உங்கள் குழந்தைகளுக்கு வேண்டிய மசாஜ், உடற்பயிற்சி, தெரபி என எதுவானலும் இந்த ஸ்பாவில் உங்களுக்குக் கிடைக்கும்.

இந்த பேபி ஸ்பா குறித்து அதன் நிர்வாக இயக்குநர் ஸ்வாதி ஜில்லா கூறுகையில், “இந்த பேபி ஸ்பா முற்றிலும் கைக்குழந்தைகளுக்கானது. பிறந்த குழந்தை முதல் ஒன்பது மாத குழந்தை வரை மட்டுமே அனுமதி. தாயின் கருவறையில் எப்படி அந்தக் குழந்தைகள் மிதந்து கொண்டிருந்தனரோ, அதுபோலவே எங்கள் இயற்கையாக மிதக்கும் திறன் இருக்கும் வரையிலான குழந்தைகளுக்கே இந்த ஸ்பா. எழுந்து நிற்கும் அளவுக்கு வளர்ந்த குழந்தைகளுக்கு இந்த ஸ்பா கிடையாது.
 

நமது பேட்டிக்கான பிரத்யேக வருகையின் போது, குழந்தை அனைரா தனது முதல் நாள் ஸ்பா எடுத்துக்கொள்ள உற்சாகமாக அதற்கென உள்ள பிரதெயேக உடையுடன் குளத்தில் பாதுகாப்புக் கவசத்துடன் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தாள்.

Advertisement

ஒவ்வொரு குழந்தையுமே கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் நீச்சல் ட்யூப் உடனே நீந்திக்கொண்டிருந்தனர். தரையில் விளையாடுவதைக் காட்டிலும் குழந்தை குளத்தில் நீந்தும் போது அதனது தசைப் பகுதிகள் விரிவடைந்து மிகவும் உற்சாகமாக இருக்கும். எல்லாப் பக்கமும் எளிதாகக் கை, கால்களை அசைத்து நீச்சல் அடிக்கும் போது குழந்தையின் உடல் திறன் மட்டுமல்லாது அறிவாற்றல் திறனும் வளரும் எனக் கூறுகின்றனர் ஸ்பா ஊழியர்கள்.

நிர்வாக இயக்குநர் ஸ்வாதி ஜில்லா கூறுகையில், “உடல் மன வளர்ச்சிகளைத் தாண்டி மேலும் பல பயன்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கும். அதாவது அக்குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பாடு, சீரான வளர்ச்சி, தீர்க்கமான கவனம், விழிப்புணர்வுடன் செயல்படும் திறன் மற்றும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியும் இந்தக் குழந்தைகளுக்குக் கூடுதலாகக் கிடைக்கும். இதற்காகத் தான் இந்த ஸ்பா” என்றார்.

Advertisement

லாரா சீவன்ஸ் என்ற நீச்சல் வீராங்கனை, பயிற்றுநர் மற்றும் ஏரோபிக்ஸ் பயிற்சியாளர் எனப் பன்முகம் கொண்டவர், முதன்முதலாக கடந்த 2005-ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் குழந்தைகளுக்கான ஹைட்ரோதெரபி மற்றும் மசாஜ் என்னும் ஸ்பா கோட்பாடை அறிமுகப்படுத்தினார். இவர் தான் லண்டனில் குழந்தைகளுக்கான உலகின் முதல் ஸ்பாவையும் நிறுவியவர் ஆவார். இவர், குழந்தைகளுக்கான ஸ்பா அவர்களின் மன அழுத்தத்த நீக்கி அவர்களை ஆற்றல் மிக்கவர்களாக உருவாக்கும் எனக் கூறுகிறார்.

மேலும் இவர் கூறுகையில், “குழந்தைகள் எப்போதும் ஒருவித அளவுகடந்த உற்சாகத்தோடும் மிகுந்த துடிப்பாவும் இருப்பது அவர்களின் கற்றல் திறனை பாதிக்கும். ஆனால், குழந்தைகள் கவனத்துடனும், ஆர்வத்துடனும் பரந்த மனப்பான்மையுடனும், எவ்வித மன அழுத்தமும் இன்றி தகவல்களை உள்வாங்கிக் கொள்ளும் திறனுடனும் இருப்பதற்கு இந்த ஹைறோதெரபி உதவும்” எனக் கூறுகிறார்.

 

Advertisement