மேலும் அந்த ஊழியரின் உடல்நிலை சீராக உள்ளதென்று தகவல்கள் தெரிவிக்கின்றன
ஹைலைட்ஸ்
- மேலும் அந்த ஊழியரின் உடல்நிலை சீராக உள்ளதென்று தகவல்கள் தெரிவிக்கின்றன
- பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியான ஆலோசனைகளை அனுப்பியுள்ளது
- அனைத்து சுத்திகரிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Bengaluru: பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்து நாடு திரும்பியபோது அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"மைன்ட்ரீ மைண்ட்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த அவர் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பியபோது, கடந்தசெவ்வாயன்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கர்நாடக சுகாதாரத் துறையின் மருத்துவ மேற்பார்வையில் இருப்பதாக, மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் தலைமை அதிகாரி பனீஷ் ராவ் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் அந்த ஊழியரின் உடல்நிலை சீராக உள்ளதென்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
"அந்த மென்பொருள் பொறியாளர் தனது வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பி வரும்போது தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார் என்றும், வேறு எந்த ஊழியரையும் அவர் சந்திக்கவில்லை என்றும்" திரு ராவ் கூறினார். பிரபல நிறுவனமான 'எல் அண்ட் டி' எனப்படும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனமும் அதன் துணை நிறுவனமும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள தனது ஊழியர்களுக்கு பணியிடங்கள் மற்றும் வீடுகளில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியான ஆலோசனைகளை அனுப்பியுள்ளது.
மின்தூக்கி, வரவேற்பறை போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அனைத்து சுத்திகரிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், தேவையான இடங்களில் அகச்சிவப்பு வெப்பமானிகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், "திரு ராவ் கூறினார்.