This Article is From Jul 02, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் 59.52 சதவீதமாக உயர்ந்தது!

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 11,881 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3,59,859 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் 59.52 சதவீதமாக உயர்ந்தது!

மொத்த பாதிப்பிலிருந்து 59.52 சதவீதம்பேர் மீண்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 6 லட்சத்தை தாண்டினர்.
  • மொத்த பாதிப்பிலிருந்து 59.52 சதவீதம்பேர் மீண்டுள்ளனர்.
  • 130 கோடி பேரில், 6 லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது
New Delhi:

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் 59.52 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 11,881 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3,59,859 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதாவது மொத்த பாதிப்பிலிருந்து 59.52 சதவீதம்பேர் மீண்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களை விட மீட்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,32,912 ஆக இருக்கிறது. தற்போது, 2,26,947 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்ததக்கது.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட 15 மாநிலங்களின் விபரம்: 
அடைப்புக்குறிக்குள் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது


மகாராஷ்டிரா (93,154), டெல்லி (59,992), தமிழ்நாடு (52,926), குஜராத் (24,030), உத்தரப்பிரதேசம் (16,629), ராஜஸ்தான் (14,574), மேற்கு வங்காளம் (12,528), மத்தியப் பிரதேசம் (10,655), ஹரியானா (10,499), தெலுங்கானா (8,082), கர்நாடகா (8,063), பீகார் (7,946), ஆந்திரா (6,988), அசாம் (5,851) மற்றும் ஒடிசா.

மீட்பு விகிதத்தில் முதல் 15 இடங்கள் - 

சண்டிகர் (82.3 சதவீதம்), மேகாலயா (80.8 சதவீதம்), ராஜஸ்தான் (79.6 சதவீதம்), உத்தரகண்ட் (78.6 சதவீதம்), சத்தீஸ்கர் (78.3 சதவீதம்), திரிபுரா (78.3 சதவீதம்), பீகார் (77.5 சதவீதம்), மிசோரம் (76.9 சதவீதம்), மத்தியப் பிரதேசம் (76.9 சதவீதம்), ஜார்க்கண்ட் (76.6 சதவீதம்), ஒடிசா (73.2 சதவீதம்), குஜராத் (72.3 சதவீதம்), ஹரியானா (70.3 சதவீதம்), லடாக் (70.1 சதவீதம்), உத்தரபிரதேசம் (69.1 சதவீதம்).



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.