This Article is From Aug 30, 2019

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்தது!!

முன்னதாக மாநில வங்கிகளை இணைப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. வலிமையான நிதி அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2013-ல் இருந்து ஒப்பிடுகையில் தற்போதைய பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்திருக்கிறது. 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியை அடைந்திருக்கிறது. 

இதற்கு முந்தைய காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீத வளர்ச்சியை இந்தியா எட்டியிருந்தது. அதற்கு முன்பாக ஜனவரி 2018 ஜூன் மாதத்தின்போது 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

2013 மார்ச் மாதத்தின்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.3 சதவீதமாக இருந்தது. நாட்டின் பொருளார வளர்ச்சி குறைந்ததற்கு கார் முதல் பிஸ்கட் வரையிலான பொருட்களின் நுகர்வு குறைந்தது, நாடு முழுவதும் ஆட்டோ மொபைல் துறையில் 3.5 லட்சம்பேர் பணி நீக்கம் உள்ளிட்டவை முக்கிய காரணங்கள் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 

ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக உயரும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். பொருளாதார மந்த நிலை காரணமாக உற்பத்தி துறைதான் அதிகளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த துறையின் மொத்த உற்பத்தி மதிப்பு 12.1 சதவீதமாக இருந்தது தற்போது 0.6 சதவீதமாக குறைந்திருக்கிறது. 

இதேபோன்று விவசாயத்துறையிலும் வளர்ச்சி குறைந்திருக்கிறது. ஓராண்டுக்கு முன்பாக 5.1 சதவீதமாக இருந்த வளர்ச்சி தற்போது 2 சதவீதமாக குறைந்துள்ளது. 

பொருளாதார பிரச்னையை சரி செய்வதற்காக வெளிநாட்டு முதலீட்டார்களுக்கான அதிகபட்ச வரிகளை நீக்கியது, மாநில வங்கிகளை இணைப்பது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. 
 

.