This Article is From Nov 11, 2019

இந்தியாவில் பொருளாதார மந்த நிலையின் விளைவு : மின்சாரத் தேவை 13.2 சதவீதம் சரிவு

மெதுவான பொருளாதார செயல்பாடுகள் கார்கள் முதல் பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் வரை அனைத்திலும் விற்பனையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, சில பெரிய அளவிலான தொழில்கள் பெரியளவில் வேலை வாய்ப்பிழப்பை உருவாக்கியுள்ளன.

இந்தியாவில் பொருளாதார மந்த நிலையின் விளைவு : மின்சாரத் தேவை 13.2 சதவீதம் சரிவு

இந்தியாவின் மின் தேவை சரிவு பொருளாதார மந்த நிலையை பிரதிபலிக்கிறது.

New Delhi:

இந்தியாவின் மின் தேவை கடந்த ஆண்டை விட 13.2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளை விட அதிகபட்ச சரிவை எதிர்கொண்டுள்ளது. அரசாங்க தகவல்களின் படி ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியாவில் மந்தநிலையை பிரதிபலிக்கின்றன. 

2024 ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றப்போவதாக மத்திய அரசு கூறியுள்ள நிலையில், இந்தியாவின் மின் தேவை சரிவு பொருளாதார மந்த நிலையை பிரதிபலிக்கிறது.  

நுகர்வோர் தேவை மற்றும் அரசாங்க செலவினங்கள் குறைந்து வருவதால் ஜூன் காலண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி பலவீனமாகவே உள்ளது.  பொருளாதார வல்லுநர்கள் மின்சாரத் தேவையின் குறையை மந்த நிலையின் பிரதிபலிப்பாகவே பார்க்கின்றனர்.

"மந்தநிலை குறிப்பாக தொழில்துறை துறையில் ஆழமாக வேரூன்றியதாகத் தெரிகிறது. இது நடப்பு ஆண்டில் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்த கவலையை நிச்சயமாக அதிகரிக்கும்" என்று தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் பேராசிரியர் என்.ஆர்.பனமூர்த்தி கூறினார். பெரிதும் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத் ஆகியவற்றில் நுகர்வு வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. கடந்த மாதம், மகாராஷ்டிராவில் மின் தேவை 22.4%, குஜராத்தில் 18.8% குறைந்துள்ளது என்று மத்திய மின்சார ஆணையத்தின் (சிஇஏ) தகவல்கள் தெரிவிக்கின்றன.செப்டம்பர் மாதத்தில் உள்கட்டமைப்பு உற்பத்தி 5.2% ஆக சுருங்கியது, இது 14 ஆண்டுகளில் மிக மோசமானது. 

.