This Article is From Nov 02, 2019

Kuwait-க்குப் புறப்பட்ட விமானம்… திடீரென்று தரையிறக்கம்… Chennai Airport-ல் திக் திக்!

Chennai Airport news - விமானம் பத்திரமாக தரையிறங்கியவுடன் நடந்த விசாரணையில், ‘ஸ்மோக் அலாரம்’ தவறுதலாக அடித்துள்ளது என்பது கண்டறியப்பட்டது. 

Kuwait-க்குப் புறப்பட்ட விமானம்… திடீரென்று தரையிறக்கம்… Chennai Airport-ல் திக் திக்!

Chennai Airport news - 163 பயணிகளுடன் இன்று அதிகாலை 1:07 மணிக்கு இண்டிகோ விமானம், குவைத்துக்குப் புறப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்திலிருந்து (Chennai Airport) குவைத் (Kuwait) நாட்டுக்குப் புறப்பட்ட இண்டிகோ (Indigo) நிறுவன விமானம் ஒன்று, பயணத்தை ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களில் அவசர அவசரமாக தரையிறங்கியுள்ளது (Emergency landing)). 

163 பயணிகளுடன் இன்று அதிகாலை 1:07 மணிக்கு இண்டிகோ விமானம், குவைத்துக்குப் புறப்பட்டுள்ளது. டேக்-ஆஃப் செய்த விமானத்தில், ‘ஸ்மோக் அலாரம்' திடீரென்று கத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து விமானக் குழுவினர், ‘அவசரநிலையை' பிரகடனம் செய்தனர். பின்னர் சுமார் 1:34 மணி அளவில் சென்னை விமான நிலையத்திலேயே அவசர அவசரமாக இண்டிகோ விமானம் தரையிறங்கியுள்ளது. 

விமானம் பத்திரமாக தரையிறங்கியவுடன் நடந்த விசாரணையில், ‘ஸ்மோக் அலாரம்' தவறுதலாக அடித்துள்ளது என்பது கண்டறியப்பட்டது. 

சென்னை விமான நிலையத்தைப் பரபரப்பாக்கிய இந்த சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம், “விமானத்தின் கார்கோ பிரிவில் ஸ்மோக் அலாரம் அடிப்பதை எங்கள் பைலட் பார்த்துள்ளார். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் சென்னை விமான நிலையத்திலேயே தரையிறங்கினார். ஆனால், இது தவறான அலாரம் என்பது தெரியவந்துள்ளது. சீக்கிரமே விமானம் மீண்டும் சேவையில் ஈடுபடும்,” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

விமானத்தில் இருந்த பயணிகளுக்கு வேறு விமானங்களை ஏற்பாடு செய்து கொடுத்தது இண்டிகோ. இந்த சம்பவம் குறித்து டிஜிசிஏ-வுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். 

.