This Article is From Aug 13, 2019

புறப்படும் நேரத்தில் விமானத்தில் கோளாறு! - விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

கோளாறான இண்டிகோ விமானத்தில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உட்பட அனைத்துப் பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

புறப்படும் நேரத்தில் விமானத்தில் கோளாறு! - விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உட்பட அனைத்துப் பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்

Nagpur:

புறப்படும் நேரத்தில் விமானத்தில் இருந்த தொழில்நுட்ப கோளாறை விமானி கண்டுபிடித்ததால், அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த நிதின் கட்கரி உட்பட பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 

நாக்பூரில் இருந்து டெல்லிக்கு 6E 636 இண்டிகோ விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உள்பட ஏராளமான பயணிகள் இருந்தனர்.

விமானம் புறப்படுவதற்காக ரன்-வேக்கு சென்று, பறப்பதற்குத் தயாராக இருந்தது. அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதைக் கண்டார் விமானி. 

இதைத்தொடர்ந்து, உடனடியாக சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை ரன்வேயில் இருந்து விமானங்களை நிறுத்துமிடத்துக்கு மீண்டும் கொண்டு வந்தார். தொடர்ந்து, கோளாறு குறித்து கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தார். 

இதையடுத்து, விமானத்தில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உட்பட அனைத்துப் பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதுதொடர்பாக நாக்பூர் விமான நிலைய மூத்த இயக்குநர் விஜய் முலேகார் கூறும்போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் புறப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். 

(With inputs from PTI)

.