Read in English
This Article is From Sep 30, 2019

நடுவானில் தீப்பிடித்த இண்டிகோ விமானம் : உயிர் தப்பிய கோவா அமைச்சர்

கோவா-டெல்லி செல்லயிருந்த விமானத்தில் புறப்பட்ட 15 நிமிடத்தில் இடதுபக்க இயந்திரம் தீப்பிடித்தது.

Advertisement
இந்தியா Edited by

விமானி உடனடியாக இடது பக்க இயந்திரத்தை நிறுத்திவிட்டு மீண்டும் கோவாவுக்கே அழைத்து சென்றார் (Representational)

Goa :

கோவாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் நிலேஷ் கப்ரால் சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் தீப்பிடித்ததால் அவசரமாக மீண்டும் கோவா விமான நிலையத்தில் தரையிறங்கியது.

 கோவா-டெல்லி செல்லயிருந்த விமானத்தில் புறப்பட்ட 15 நிமிடத்தில் இடதுபக்க இயந்திரம் தீப்பிடித்தது. 

ஐஏஎன்எஸ்ஸுடன் பேசிய நிலேஷ் கப்ரால், “விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் இயந்திரம் தீப்பிடித்தது” என்று கூறினார். “விமானி உடனடியாக இடது பக்க இயந்திரத்தை நிறுத்திவிட்டு மீண்டும் கோவாவுக்கே அழைத்து சென்றார்” என்று அமைச்சர் கூறினார். 

சம்பவம் நடந்த நேரத்தில் சுமார் 180 பயணிகள் இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement
Advertisement