இண்டிகோ நிறுவனம் இண்டர் குளோப் ஏவியேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமன இண்டிகோ இன்று காலை முதல் அதன் நெட்வொர்க் அமைப்பு செயலிழந்து விட்டதாக தெரிவித்துள்ளது. இதனால் விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சிக்கலை விரைவாக தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன” என்று இண்டிகோ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இண்டிகோ நிறுவனம் இண்டர் குளோப் ஏவியேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. உள்நாட்டுச் சந்தையில் 50% பங்கை கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகள் புகார்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். டஜன் கணக்கான விமானங்கள் தாமதம் அல்லது ரத்து செய்யப்படலாம்.