டாக்டர்களுக்கும் செவிலியர்களுக்கும் தள்ளுபடி வழங்கும் திட்டத்தினை இன்டிகோ தொடங்கியுள்ளது.
New Delhi: சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஒரு கோடியை கடந்துள்ள நிலையில், இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தினை கடந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணியில் முன்னணியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு விமான பயண தொகையில் 25 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என இன்டிகோ விமான சேவை நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. இந்த சலுகையானது இந்த ஆண்டு(2020) இறுவரை நடைமுறையில் இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
"செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் தங்கள் அடையாளத்திற்கான சான்றாக செக்-இன் நேரத்தில் செல்லுபடியாகும் மருத்துவமனை அடையாளங்களை வழங்க வேண்டும்" என்று விமான நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அதே போல இன்டிகோ வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கான இந்த சலுகையானது ஜூலை 01, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரை அமலில் இருக்கும் என்றும் இன்டிகோ தெரிவித்துள்ளது.
ஜூலை 1வரை 71,471 பயணிகள் 785 விமானங்களில் பயணித்துள்ளனர். எனில் சராசரியாக ஒரு விமானத்தில் 91 நபர்கள் பயணித்துள்ளனர் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஏ 320 விமானத்தில் சுமார் 180 இருக்கைகள் இருக்கும்.
இந்நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை கணக்கில் கொண்டு இன்டிகோ நிறுவனம் நெருக்கடியான காலக்கட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என இன்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் திட்டமிட்ட விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)