This Article is From Nov 20, 2018

உத்தர பிரதேசத்தில் இந்தியா - ரஷ்யா போர்ப் பயிற்சி

10 நாட்களுக்கு போர்ப்பயிற்சி நடைபெறுகிறது. இதில் ரஷ்ய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்

உத்தர பிரதேசத்தில் இந்தியா - ரஷ்யா போர்ப் பயிற்சி

சுற்றுச் சூழலை பயன்படுத்தி எதிரிகள் ஊடுருவுவதை தடுக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

Lucknow:

இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான ராணுவ போர்ப்பயிற்சிகள் உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. இரு நாடுகளும் ஏற்கனவே 4 முறை இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ள நிலையில், 5-வது முறையாக இன்று பயிற்சிகள் தொடங்கியுள்ளன.

இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு இந்த பயிற்சி நடைபெறும். இந்தியா தரப்பில் மேஜர் ஜெனரல் பி.எஸ்.மன்ஹாஸ், தலைமையிலும், ரஷ்யா தரப்பில் மேஜர் ஜெனரல் செகோவ் மசோவிக் தலைமையிலும் ராணுவ வீரர்கள் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.

ராணுவத்தின் அதி நவீன ஹெலிகாப்டர்கள் பயிற்சியின்போது பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரிகள் கூறுகையில், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஐ.நா. பாதுகாப்பு படையில் ரஷ்யாவும் இந்தியாவும் இடம்பெற்றுள்ளன. இங்கு மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் ஐ.நா. அமைதிப்படையில் சிறப்பாக செயல்படுவதற்கு உதவும் என்று தெரிவித்தனர்.

உயர்மட்ட ராணுவ யுக்திகளை கற்றுக் கொடுக்கும் வகையிலும், சுற்றுச் சூழலை பயன்படுத்தி எதிரிகள் ஊடுருவுவதை தடுக்கவும் இந்த 10 நாட்கள் பயிற்சியின்போது வீரர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

.