This Article is From Oct 30, 2018

189 பேர் உயிரிழந்ததன் எதிரொலி: போயிங் 737 விமானத்தை ஆய்வு செய்யும் இந்தோனேசியா

போயிங் 737 ரக விமானங்களை ஆய்வு செய்யுமாறு இந்தோனேசியாவின் போக்குவரத்து துறை அமைச்சர் புடி கர்யா உத்தரவிட்டுள்ளார்

189 பேர் உயிரிழந்ததன் எதிரொலி: போயிங் 737 விமானத்தை ஆய்வு செய்யும் இந்தோனேசியா

189 பேருடன் சென்ற விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

Jakarta:

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்டுச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த 189 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட போயிங்க 737 ரக விமானங்களை ஆய்வு செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜகார்த்தாவில் இருந்து பங்கல்பினாங் நகருக்கு புறப்பட்டுச் சென்ற விமானத்தில் 189 பேர் இருந்தனர். நேற்று முன்தினம் காலை புறப்பட்ட விமானம், புறப்பட்ட 13வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இதையடுத்து மாயமான விமானத்தை கப்பல்கள் மூலம் தேடும்பணி நடந்தது. இந்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த 189 பேரும் உயிரிழந்து விட்டதாக அறவிக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.

விபத்து நடந்து 2 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இந்தோனேசியாவில் பயன்பாட்டில் இருக்கும் போயிங் 737 ரக விமானங்களை ஆய்வு செய்யுமாறு இந்தோனேசிய போக்குவரத்து துறை அமைச்சர் புடி கர்யா உத்தரவிட்டுள்ளார்.

.