Read in English
This Article is From Nov 26, 2018

பார்ன் சைட்டை பார்த்தா இந்த கிராமத்தில என்ன தண்டனை தெரியுமா...?

இது போன்ற செயல்கள் அவர்களது குணங்களையே மாற்றிவிடும் என்பது அங்குள்ள மக்களின் கருத்தாக இருக்கிறது

Advertisement
உலகம்
Banda Aceh:

இன்தோனேஸியாவை சேர்ந்த ஏசேஹ கிராமத்தில் இஸ்லாமிய மதத்தையே பெரும்பான்மையான மக்கள் பின்பற்றுகின்றனர்.

அதனால் அங்குள்ள பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கூரான் படிக்க அனுப்புவதுண்டு. இந்நிலையில் அங்குள்ள சில இளைஞர்கள் கூரான் வாசிக்கும் வகுப்புக்கு செல்லாமல் தேநீர் விடுதிகளில் இருந்து ஆபாச வீடியோகளை பார்ப்பதை அறிந்த பெரியவர்கள் அக்கிராமத்தில் உள்ள இணைய தொடர்பை நிறுத்தியுள்ளனர்.

தங்களது மத நம்பிக்கைகளை மீறி செயல் படுவோருக்கு அக்கிராமத்தில் பொதுதண்டணைகள் கொடுக்கப்படுவது வழக்கம். இதற்குமுன் ஓரினச்சேர்க்கைகள், சூதாட்டம் மற்றும் மது போன்ற செயல்களில் ஈடுபட்டோர்க்கு பொது தண்டனை கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஏசேஹ கிராமத்தில் உள்ள இந்த தடை சம்பவம் உலகத்தில் உள்ள மற்ற மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அங்குள்ள பாதிக்கும் மேற்ப்பட்ட காஃபேகள் இன்டர்நெட் சேவையை முடக்கியுள்ள நிலையில் அந்த கிராமத்தின் தலைவர் ஹேல்மீயாடி மூக்தாருதின் கூறுகையில் ‘இதற்க்கு முன்னால் பிள்ளைகள் மாலை பொழுதுகளில் இறைவனடி பிராத்தனை செய்வார்கள், ஆனால் தற்போது ஆபாச காட்சிகள் பார்ப்பது போன்ற தவறுகளை செய்யத் தொடங்கி விட்டனர்' என தெரிவித்தார்.

Advertisement

மேலும் இது போன்ற செயல்கள் அவர்களது குணங்களையே மாற்றிவிடும் என்பது அங்குள்ள மக்களின் கருத்தாக இருக்கிறது.

Advertisement