This Article is From Oct 12, 2019

நீடிக்கும் பொருளாதார மந்தநிலை! மைனஸ் 1.1 சதவீதத்திற்கு சென்றது தொழிற்சாலை உற்பத்தி!!

தொழிற்சாலை உற்பத்தி கடந்த 2018 ஆகஸ்டில் 4.8 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஜூலை மாதத்தின்போது 4.3 சதவீதமாக குறைந்திருந்த நிலையில், ஆகஸ்டில் மைனஸ் 1.1 சதவீதத்திற்கு சென்றிருக்கிறது. 

நீடிக்கும் பொருளாதார மந்தநிலை! மைனஸ் 1.1 சதவீதத்திற்கு சென்றது தொழிற்சாலை உற்பத்தி!!

இம்மாதத்தில் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Industrial Production அல்லது Factory output எனப்படும் தொழிற்சாலை உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தின்போது மைனஸ் 1.1 சதவீதத்திற்கு சென்று விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்ததகவலை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

தொழிற்சாலை உற்பத்தி கடந்த 2018 ஆகஸ்டில் 4.8 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஜூலை மாதத்தின்போது 4.3 சதவீதமாக குறைந்திருந்த நிலையில், ஆகஸ்டில் மைனஸ் 1.1 சதவீதத்திற்கு சென்றிருக்கிறது. 

இந்த மாதத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தொழில்துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தொரிற்சாலை உற்பத்தி சதவீதம் குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாட்டின் 23 முக்கிய தொழில்துறை குழுமங்களில் 15 குழுமங்களின் தொழிற்சாலை உற்பத்தி மைனஸ் நிலைக்கு கடந்த ஆகஸ்டில் சென்றது. இது முந்தைய ஆண்டுகளில் ஆகஸ்ட் மாத முடிவுகளை பார்க்கும்போது மிகவும் குறைவான உற்பத்தியாகும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.