Read in English
This Article is From Jun 26, 2020

20 பெண்களை சீரழித்த சீரியல் கில்லர் ‘சைனைடு’ மோகன்; கடைசி வழக்கில் பெற்ற தண்டனை என்ன?

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து திருடப்பட்ட நகையானது, அந்தப் பெண்ணின் தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Advertisement
இந்தியா Edited by

இந்த வழக்கில் 46 சாட்சியங்கள், 89 ஆதாரங்கள் மற்றும் 31 அசட்களை விசாரணையின் போது ஆய்வு செய்தது நீதிமன்றம். 

Highlights

  • இது சைனைடு மோகன் மீதான 20வது மற்றும் கடைசி வழக்கு
  • இதிலும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
  • இதுவரை 5 வழக்குகளில் மரண தண்டனை பெற்றுள்ளார் மோகன்
Mangaluru:

பல பெண்களுடன் நட்பாக பழகி, அவர்களுடன் பாலியல் வல்லுறவு மேற்கொண்ட பின்னர் சைனைடு வைத்துக் கொலை செய்து வந்த சீரியல் கில்லர் ‘சைனைடு' மோகன் மீது தொடரப்பட்டிருந்த இன்னொரு வழக்கிலும் தீர்ப்பு வந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் மோகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

சீரியல் கில்லர் வழக்கு வரிசையில், இது அவர் மீது தொடரப்பட்டிருந்த 20வது மற்றும் கடைசி வழக்கு. 

முன்னதாக தொடரப்பட்ட வழக்குகளில் 5ல் அவருக்கு மரண தண்டனையும் மற்றவைகளில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. 5 மரண தண்டனைகளில் 2ல் அது, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

Advertisement

20வது வழக்கில், கேரளாவின் காசர்கோடைச் சேர்ந்த 25 வயது பெண்ணைக் கடந்த 2009 ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொள்வதாக பொய் சொல்லி பெங்களூரு அழைத்துச் சென்றுள்ளார். 

அங்கு அந்தப் பெண்ணுடன் லாட்ஜ் ஒன்றில் தங்கிய மோகன், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அடுத்த நாள் அந்தப் பெண்ணிற்குக் கருத்தடை மாத்திரை என்று சொல்லி சைனைடை கொடுத்துள்ளார். 

Advertisement

இதே வழிமுறையைத்தான், தான் சீரழித்த அனைத்துப் பெண்கள் மீதும் பயன்படுத்தியுள்ளார் மோகன். 

20வது வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், “ஐபிசி பிரிவு 302ன்படி, கொலை செய்த குற்றத்திற்காக 25,000 ரூபாய் அபராதமும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுகிறது. பெண்ணைக் கடத்திய குற்றத்திற்காக 5,000 ரூபாய் அபராதம் மற்றும் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. விஷம் கொடுத்த காரணத்திற்காக 5,000 ரூபாய் அபராதமும் 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது. பெண்ணின் நகைகளைத் திருடிய காரணத்திற்காக 5,000 ரூபாய் அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

இந்த வழக்கில் 46 சாட்சியங்கள், 89 ஆதாரங்கள் மற்றும் 31 அசட்களை விசாரணையின் போது ஆய்வு செய்தது நீதிமன்றம். 

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து திருடப்பட்ட நகையானது, அந்தப் பெண்ணின் தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Advertisement